"இலை இருக்கு..! சோறு இல்ல..!" - விவசாயிகள் நூதன போராட்டம்..!
தஞ்சாவூரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு நூற்றுக்கணக்கான விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தஞ்சாவூரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு நூற்றுக்கணக்கான விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35,000 வழங்க வேண்டும், விவசாயத்திற்கான உரம் விலையை குறைக்க வேண்டும், விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கிட வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
”வாழை இலை இருக்கு, சோறு இல்லை.. இதுதான் விவசாயிகள் நிலை” என்பதை வலியுறுத்தும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தரையில் வாழை இலையை விரித்து, உணவுக்காக காத்துக் கொண்டு இருப்பது போல நூதன முறையில் போராடினர்.
What's Your Reaction?