ராசிபலன்: உங்களின் ராசிக்கு இன்று என்ன பலன் தெரியுமா?
இன்றைய 12 ராசிகளுக்கான தினபலனில் பணவரவு, குடும்பம், உடல்நலம், உறவுகள் மற்றும் வியாபாரம் ஆகியவை தொடர்பான முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
மேஷம்:
தாய்மாமன் வழியாக எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சில காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டாலும், இறுதியில் சாதகமாக முடியும். மாலையில் மகிழ்ச்சியளிக்கும் செய்தி கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணை தொடர்பான தகவல் கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சீராக நடைபெறும்.
ரிஷபம்:
நீங்கள் மேற்கொள்ளும் காரியங்கள் சாதகமாக நிறைவேறும். தாய்வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். மாலையில் ஏற்படும் திடீர் செலவுகளால் சேமிப்பு குறையலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
மிதுனம்:
தெய்வ பக்தி அதிகரிக்கும் நாள். தொடங்கும் முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். தந்தை வழி உறவினர்களின் உதவி கிடைக்கலாம். மாலையில் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணியாளர்களால் வியாபாரத்தில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம்.
கடகம்:
இன்று புதிய முயற்சிகளைத் தொடங்காமல் இருப்பது நல்லது. வீட்டில் தெய்வ வழிபாடு நடத்தும் சூழல் சிலருக்கு ஏற்படும். பிற்பகலுக்குப் பிறகு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கலாம். வயிறு தொடர்பான உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவில் கவனம் செலுத்தவும். வியாபாரத்திலும் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
சிம்மம்:
காரியங்கள் தாமதமாக நடந்தாலும், இறுதியில் நிறைவேறும். உடல்நலத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். உறவினர்களுடன் கருத்து மோதல் ஏற்படலாம். தாயின் தேவைகளுக்காக கூடுதல் செலவு செய்ய நேரிடும். அக்கம்பக்கத்தினரால் தேவையற்ற பிரச்னைகள் உருவாகலாம். பொறுமையுடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களின் மறைமுக இடையூறுகள் ஏற்படலாம்.
கன்னி:
பணவரவு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொலைதூரச் செய்தி இன்று கிடைக்கும். தம்பதியரிடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் காரணமாக கையிருப்பு குறையலாம். வாடிக்கையாளர்களிடம் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.
துலாம்:
தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவை தைரியமாக எடுப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உயரும்.
விருச்சிகம்:
வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பிற்பகலுக்குப் பிறகு உறவினர்கள் காரணமாக குடும்பத்தில் சிறிய சங்கடங்கள் ஏற்படலாம். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும்.
தனுசு:
மனதில் காரணமில்லாத குழப்பம் ஏற்படலாம். புதிய முயற்சிகளைத் தொடங்க வேண்டாம். வாழ்க்கைத்துணையின் உறவினர்களால் செலவுகள் ஏற்படலாம். அக்கம்பக்கத்தினரின் தலையீடு குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களுடன் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளுங்கள்.
மகரம்:
மனதில் தைரியமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். தந்தை வழி உறவினர்களால் காரியங்கள் சாதகமாக முடியும். எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இளைய சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு கிடைக்கலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கும்பம்:
எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். சகோதரர்கள் பண உதவி கேட்டு வரலாம். அரசாங்கம் தொடர்பான காரியம் சாதகமாக முடியும். எதிரிகளால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருங்கள். கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கலாம். வியாபாரத்தில் பணப் பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.
மீனம்:
இன்று பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் செயல்பட வேண்டிய நாள். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் அளிக்கும். உறவினர்களால் தேவையற்ற மனக்கசப்பு ஏற்படலாம். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் கிடைப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் ஏற்படும் சிறிய பிரச்னைகள் பின்னர் சரியாகும்.
What's Your Reaction?

