இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு... வானிலை அலர்ட்!

சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Aug 29, 2026 - 07:21
இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு... வானிலை அலர்ட்!
Weather Alert

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வருகின்ற 1 ஆம் தேதி வரை பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஏனைய தமிழ்நாட்டில்  ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்த வரையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை

வெப்பநிலையை பொறுத்த வரைக்கும் அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், தமிழ்நாட்டின் உள் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வரும் 1-ஆம் தேதி வரை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாகப் பதிவாகக்கூடும் என எச்சரித்துள்ளது.

மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow