வேலுநாச்சியாரா? ஜான்சிராணியா? கன்ஃபூஸ் ஆன சீமான்… கலாய்த்த ரத்னகுமார்!

நாதக கூட்டத்தில் தவெக தலைவர் விஜய்யை விமர்சிப்பதற்காக சீமான் கூறிய கருத்துக்கள் இணையத்தில் வைரலான நிலையில், அதுகுறித்து இயக்குநர் ரத்ன குமார் எக்ஸ் பக்கத்தில் ரியாக்ட் செய்துள்ளார். 

வேலுநாச்சியாரா? ஜான்சிராணியா? கன்ஃபூஸ் ஆன சீமான்… கலாய்த்த ரத்னகுமார்!

 நாம் தமிழர் கட்சியின் சார்பாக நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தார்.
அப்போது பேசிய அவர், “விஜய் தனது ஒரு கொள்கைத் தலைவர்களில் ஒருவராக வேலு நாச்சியாரை வைத்துள்ளார். தவெக மாநாட்டில் வைத்த கட் அவுட்டில் இருக்கும் படமே, நான் வரைந்தது.  நான் அரசியலுக்கு வந்த பிறகுதான் சேர, சோழ, பாண்டியன், அழகு முத்துக்கோன் உள்ளிட்டோரை மக்களுக்குத் தெரியும்” என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய சீமான், வேலுநாச்சியாரின் கட் அவுட் வைத்த விஜய்க்கு அவரது வரலாறு தெரியுமா? எனக் கேள்வி எழுப்பியதோடு, ”யார் வேலு நாச்சியார் தெரியுமா? கணவர் உடல் மீது சத்தியம் செய்து கைக்குழந்தையைத் தோளில் உப்பு மூட்டை போலக் கட்டிக்கொண்டு இழந்த நிலத்தை நான் மீட்டே தீருவேன் என்று உறுதி எடுத்துச் சென்று வென்று முடித்த வரலாறு தான் தமிழின வரலாறு” என விளக்கம் கொடுத்தார். 
சீமான் வேலுநாச்சியார் குறித்து கூறிய கருத்துகள் தவறானவை என்றும், ”சீமான் கூற வருவது ஜான்சி ராணியின் வரலாறு” என்றும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி  வருகின்றனர். மேலும், ‘வேலு நாச்சியார் தனது கணவர் இறந்து 8 ஆண்டுகள் பிறகு தான் வெள்ளையர்களிடம் போர் புரிந்தார்’ எனவும் நெட்டிசன்கள் அவர்களது கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ‘மேயாத மான்’, ‘ஆடை’ திரைப்படத்தின் இயக்குநரான ரத்ன குமாரும் சீமானை கலாய்க்கும் விதமாக ஒரு பதிவு ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சீமான் பேசியதை வைத்து, தம்பி ராமையா கன்ஃபூஸான ரியாக்‌ஷனை வைத்து பதிவிட்டுள்ளார். 
இயக்குநர் ரத்ன குமார் ஏற்கனவே விஜய்யின் ரசிகர் என்பதால் அவரது பதிவு வைரலாக பரவி வருகிறது. அவரைத் தாண்டி மேலும் பல நெட்டிசன்கள் சீமானைக் கலாய்த்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow