Oscar 2025: இந்திய ரசிகர்களின் கனவினை தகர்த்த டச்சு மொழி குறும்படம்!

சிறந்த குறும்படத்திற்கான பிரிவில் இடம்பெற்றிருந்த ”அனுஜா” ஆஸ்கர் விருதினை பெறாமல் போனதால் இந்திய சினிமா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Mar 3, 2025 - 10:41
Mar 3, 2025 - 13:05
Oscar 2025: இந்திய ரசிகர்களின் கனவினை தகர்த்த டச்சு மொழி குறும்படம்!
oscar 2025 event

திரையுலகினை சார்ந்த கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படுவது இன்றளவும் ஆஸ்கர் தான். இந்நிலையில் 97-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்வானது இன்று அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

சிறந்த நடிகர், நடிகை உட்பட மொத்தம் 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்ட நிலையில் சிறந்த குறும்படத்திற்கான பிரிவில் இடம்பெற்றிருந்தஅனுஜாஆஸ்கர் விருதினை பெறாமல் போனதால் இந்திய சினிமா ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தியாவிலிருந்து இந்தாண்டு ஆஸ்கர் விருதிற்கான இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற ஒரே படம் அனுஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது: வென்றது யார்?

2025 Oscar Nominated Short Films: Live Action” என்கிற பிரிவில் அனுஜா உட்பட மொத்தம் 5 படங்கள் விருதிற்கான போட்டியில் இருந்தன. அனுஜா தவிர்த்து பட்டியலில் இடம்பெற்றிருந்த மற்ற குறும்படங்களின் விவரம் முறையே: ”A Lien" ( லியன்), "The Last Ranger" (தி லாஸ்ட் ரேஞ்சர்), "The Man Who Could Not Remain Silent" (தி மேன் ஹூ குட் நாட் ரிமைன் சைலண்ட்),  'I'm Not A Robot' ( ஆம் நாட் ரோபோ). ஆடம் ஜே கிரேவ்ஸ் மற்றும் சுசித்ரா மத்தாய் இயக்கிய "அனுஜா" தற்போது நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகி வருகிறது. இக்குறும்படத்தினை புகழ்பெற்ற பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் குணீத் மோங்கா, ஹாலிவுட் நட்சத்திர எழுத்தாளர் மிண்டி கலிங் ஆகியோர் தயாரித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பாண்டு ஆஸ்கர் விருதுக்கான ரேஸில் இந்திய சினிமா ரசிகர்களின் ஒரே நம்பிக்கையாக இருந்த அனுஜா-வினை முந்தி டச்சு மொழி திரைப்படமான " ஆம் நாட் ரோபோ" என்கிற குறும்படம் ஆஸ்கர் விருதினை வென்றது. இக்குறும்படமானது ஒரு அறிவியல் புனைக்கதையினை அடிப்படையாக கொண்டது. இப்படத்தினை விக்டோரியா வார்மர்டாம் எழுதி இயக்கியிருந்தார்.

ஆம் நாட் ரோபோ: என்ன கதை?

ஆஸ்கர் விருதினை வென்ற  'I'm Not A Robot' குறும்படத்தின் மொத்த நீளம் 22 நிமிடங்கள் மட்டுமே. ஒரு ஸ்டைலான நவீன அலுவலகக் கட்டிடத்தில், லாரா (எல்லன் பாரென்) தனது கணினியில் அமர்ந்து "க்ரீப்" பாடலின் அட்டைப்படத்தைக் கேட்கிறார். அப்போது தனது திரையில் எரிச்சலூட்டும் CAPTCHA ஒன்றை எதிர்கொள்கிறார் லாரா. பலமுறை CAPTCHA உள்ளீடு செய்தாலும் தொடர்ந்து தோல்வியடைகிறார். மனிதர்களை போட்களிடமிருந்து பிரிக்கும் நோக்கில் மனதை மரத்துப்போகச் செய்யும் சோதனைகளில் நேரத்தை வீணடிப்பதில் நாம் அனைவரும் அங்கு இருந்திருக்கிறோம். இதற்கு அடுத்து தனது வித்தியாசமான திரைக்கதையினால் ரசிகர்களை ஈர்க்கிறார் இயக்குனர் விக்டோரியா வார்மர்டாம். அனுஜா குறும்படத்தின் கதையானது அனுஜா என்கிற சிறுமியின் வாழ்வியலில் நடக்கும் திருப்பங்களை அடிப்படையாக கொண்டது.

Read more: விஜய்யின் மகன் இயக்கும் முதல் திரைப்படம் - ஹீரோ யார் தெரியுமா?

சைலண்டாக சாதித்த அனோரா:

எமிலியா பெரெஸ் என்கிற பிரென்ச் திரைப்படம் மொத்தம் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், சைலண்ட்டாக பட்டியலில் இருந்த 'Anora' நடப்பாண்டுக்கான ஆஸ்கர் விருது நிகழ்வில் பட்டையை கிளப்பி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அனோரா படத்திற்கு மட்டும் 5 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

Read also: கங்குவா விமர்சனம் என்ற பெயரில் தனிமனித தாக்குதல்- தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow