விஜய் நாளை அவசர ஆலோசனை -சுற்றுப்பயணம் குறித்து முடிவு?
டிசம்பர் 27 முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் அக்.27ம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மாநாட்டை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. மேலும் தவெக மாநாட்டில் பேசிய விஜய் கூட்டணி ஆட்சியில் அதிகார பகிர்வு கொடுக்கப்படும் என்று கூறினார். இதன் மூலம் அதிமுக, திமுக, பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளை வரவழைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகளை வழங்கவும், தேர்தல் அரசியலுக்கான அனைத்து பணிகளையும் விஜய் வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தமிழக தவெக தலைவரும், நடிகருமான விஜய் தலைமையில் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
தவெக மாநாடு குறித்தும், 234 தொகுதிகளிலும் மேற்கொள்ள சுற்றுப்பயணம் குறித்தும், அவசர ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட கூறப்படுகிறது. மேலும் டிசம்பர் 27 முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுப்பயணத்தின்போது, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 2 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் சுற்றுப்பயணத்திற்கென தனியாக வாகனங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. விக்கிரவாண்டி மாநாட்டை தொடர்ந்து நெல்லையிலும் மாவட்டத்தை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
What's Your Reaction?