இபிஎஸ்ஸை பற்றி பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம் - அமைச்சர் சேகர்பாபு பதில்
பலம் இல்லாமல் தமிழிசை பேசி வருகிறார். திமுக பலமாக அரசியல் களத்தில் இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி ஒரு நிலையில்லா மனிதர் அவரை பற்றி பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என அமைச்சர் சேகர்பாபு பேட்டி
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மற்றும் நடைபெறவுள்ள பல்வேறு பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம் அதனை தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனை மேம்பாலம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை) பழைய பணிமனையில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்பு திட்ட பணிகள் அமைத்தல் ஆகிய பணிகளையும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது வீட்டு வசதி வாரியத்தின் செயலாளர் காக்கர்லா உஷா மற்றும் CMDA உறுப்பினர் செயலர் அன்சுல் மிஷ்ரா மற்றும் மீன்வளத்துறை ஆணையர் கெஜலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, “வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 218 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் சார்பில் மேற்கொண்ட தி்ட்டபணிகளை காலை முதல் ஆய்வு செய்து வருகிறோம். கொளத்தூரில் உள்ள வண்ண மீன்கள் விற்பனை உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களுக்கு 54 கோடி ரூபாய் செலவில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 138 கடைகள் கட்டுமான பணிகள் முதல்வர் தொடங்கி வைத்தார்.அந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டும் அதை தொடர்ந்து யூனைட் காலணியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நூலகத்தை பார்வையிட்டு நூலகத்தை மேம்படுத்துவதற்கான ஆய்வினை மேற்கொண்டோம்.
776 வீடுகள் கட்டப்பட உள்ளோம். வால்டாக்ஸி சாலையில் 700 குடியிருப்புகள் என மொத்தமாக 1476 குடியிருப்பு பணிகள் இந்த மாதம் இறுதியில் தொடங்கப்படும். அடுத்த மாதம் டிசம்பர் மக்கள் இடம் கொடுக்கப்படும். முதலமைச்சர் நேரடி கண்காணிப்பு வடசென்னை தொகுதி உள்ளது. இந்த வடசென்னை பகுதியில் உள்ள நூலகங்கள் புதுப்பிக்கப்படும். அடிப்படை தேவைகள் அனைத்து நிறைவேற்றபடும்.ஒரு சில சாலைகள் அகலப்படுத்தும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இது குறித்தான ஆய்வுக் கூட்டமும் வருகின்ற 15ஆம் தேதி துணை முதலமைச்சர் தலைமையில் நடைபெற நடைபெற உள்ளது. 74 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிராட்வே பேருந்து நிலையத்தை 822 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்டத்தை தயாரித்து மல்டி லெவல் கார் பார்க்கிங் உள்ளிட்ட வணிக வளாகங்கள் உட்பட ஒன்பது மாடி கட்டிடம் ஆகவும் பேருந்து நிலையமும் மீதம் உள்ள இடங்கள் வணிக வளாகத்திற்கும் பயன்படுத்தப்பட உள்ளது.
அரசு ஊழியர்களை பொருத்தவரை திமுகவின் ஒரு அங்கம். கடுமையான நிதி நெருக்கடி பல்வேறு சூழல்கள் இருந்த போதும், அவர்களின் வாழ்வாதாரத்தை பேணிக் காக்கக்கூடிய முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்திருக்கிறார். பலம் இல்லாமல் தமிழிசை பேசி வருகிறார். திமுக பலமாக அரசியல் களத்தில் இருக்கிறது. 2026-ல் நிச்சியம் திமுக 200 தொகுதியில் வெற்றி பெறும்.பாஜகவோடு கூட்டணியில் இல்லை என கூறிய எடப்பாடி ஒத்த கருந்து உடைய கட்சிகளோடு கூட்டணி வைக்கப்படும் என இபிஎஸ் பேசியது குறித்தான கேள்விக்கு, அவருடைய தன்மானம் அரசியல் சூழலை பற்றி நன்றாக அறிவீர்கள். நிலையில்லாத மனிதர் இபிஎஸ். அவரைப் பற்றி பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என தெரிவித்தார்.
What's Your Reaction?