பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி தலைமறைவு... லுக்அவுட் நோட்டீஸ்

பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவானதால் சிபிசிஐடி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

Mar 11, 2024 - 11:39
பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி தலைமறைவு... லுக்அவுட் நோட்டீஸ்

பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவானதால் சிபிசிஐடி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

2021-ம் ஆண்டு தமிழக காவல்துறை சிறப்பு டிஜிபி-ஆக இருந்த ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுக்க முயற்சித்தபோது, அந்தப் புகாரை செங்கல்பட்டு எஸ்.பி.-ஆக இருந்த கண்ணன் என்பவர் தடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதனால், ராஜேஷ் தாஸ், கண்ணன் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்தார்கள்.

இந்த வழக்கின் விசாரணை, விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், எஸ்.பி. கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தது.

தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு வைத்த கோரிக்கையையும் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து அவரைக் கைது செய்ய சிபிசிஐடி அதிகாரிகள், சென்னை தையூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற போது, ராஜேஷ் தாஸ் அங்கு இல்லை. அவரது வீட்டு காவலாளிகளிடம் அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

ராஜேஷ் தாஸ் தலைமறைவானதால், சிபிசிஐடி லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow