பேருந்தில் கடத்தி வரப்பட்ட 15,000 போதை மாத்திரைகள்... கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த பறக்கும் படை...
சென்னை ஆவடியில் 15,000 போதை மாத்திரைகளை பேருந்தில் கடத்தி சென்ற 2 இளைஞர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை ஆவடியில் 15,000 போதை மாத்திரைகளை பேருந்தில் கடத்தி சென்ற 2 இளைஞர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஆவடியை அடுத்த கோவில்பதாகை ஜெகஜீவன் ராம் சிலை பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஆவடியில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் மாநகரப் பேருந்து தடம் எண் 61R-ஐ நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது பேருந்தின் பின்புறம் அமர்ந்திருந்த 3 இளைஞர்கள், அவர்கள் வைத்திருந்த கைப்பையை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தொடர்ந்து அந்த பைகளை சோதனை செய்த போது, அதில் 15,000 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அதே பகுதியில் உள்ள புதருக்குள் பதுங்கி இருந்த முகப்பேர் பகுதியை சேர்ந்த தினேஷ்(24) மற்றும் கலையரசு (26) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஐதராபாத் மாநிலத்திலிருந்து போதை மாத்திரைகளை மொத்த விலையில் வாங்கி, சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருவரும் விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?