தேசிய கட்சிகளுக்கு டஃப் கொடுத்த திமுக..!! ஒரே நிறுவனத்திடமிருந்து இவ்வளவு வசூலா..? வெளிச்சத்துக்கு வந்த ரகசிய(தேர்தல்) பத்திரம்..

Future Gaming and Hotel Services நிறுவனம் மட்டும் ரூ.509 கோடியை திமுகவிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

Mar 17, 2024 - 17:57
தேசிய கட்சிகளுக்கு டஃப் கொடுத்த திமுக..!! ஒரே நிறுவனத்திடமிருந்து இவ்வளவு வசூலா..? வெளிச்சத்துக்கு வந்த ரகசிய(தேர்தல்) பத்திரம்..

தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக பெற்றுள்ள ரூ.656.5 கோடியில் லாட்டரி மார்ட்டினின் நிறுவனமாக கருதப்படும் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் மட்டும் ரூ.509 கோடி நன்கொடை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

தேர்தல் பத்திர நடைமுறையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு, பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 12-ம் தேதி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ. வங்கி வழங்கியது. தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்களை பொதுவெளியில் வெளியிட்டது. ஆனால், அதில், எந்தெந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கினார்கள் என்பது குறித்தும், எந்த தேதியில் அரசியல் கட்சிகள் பத்திரங்களை வங்கியில் கொடுத்து ரொக்கமாக மாற்றின என்பது குறித்த விவரங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. எந்த கட்சிக்கு யார் நன்கொடை கொடுத்தது என்ற விவரங்கள், எஸ்பிஐ வங்கி வழங்கிய விவரத்தில் இடம்பெறவில்லை...  

இதையடுத்து, எஸ்பிஐ வங்கியின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து விபரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. 

அதன்படி, அரசியல் கட்சிக்கு யார் யார் எவ்வளவு நிதி கொடுத்தனர் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 17) வெளியிட்டுள்ளது. அதில், திமுகவிற்கு பல்வேறு நிறுவனங்கள் மொத்தமாக ரூ.656.5 கோடிகளை நன்கொடையாக வழங்கியுள்ளன. 
இதில், அதிகபட்சமாக லாட்டரி மார்ட்டினின் நிறுவனமாக கருதப்படும் கோவையை சேர்ந்த Future Gaming and Hotel Services நிறுவனம் மட்டும் ரூ.509 கோடியை திமுகவிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இதுபோக,

Mega Infrastructure நிறுவனம் - ரூ.85 கோடி, 
இந்தியா சிமெண்ட் நிறுவனம் - ரூ.14 கோடி,
சன் நெட்வொர்க் நிறுவனம் - ரூ.10 கோடி,
திரிவேணி நிறுவனம் - ரூ.8 கோடி,
அப்போலோ நிறுவனம் - ரூ.1 கோடி,
ஆதித்ய பிர்லா குரூப் நிறுவனம் - ரூ.1 கோடி,
IRB Infrastructure Developers நிறுவனம் - ரூ.2 கோடியும் நன்கொடையாக வழங்கியுள்ளன. 

அதிமுகவிற்கு ரூ.6.05 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. 

அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம் ரூ.5 கோடியும், கோவை Lakshmi Machine Works Limited நிறுவனம் ரூ.1 கோடியும், கோபால் ஸ்ரீனிவாசன் ரூ.5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow