ரஷ்ய அதிபர் புதின் பரிசளித்த காரில் பயணித்த கிம் ஜாங் உன்!...
ரஷ்ய அதிபர் புதின் பரிசளித்த லிமோசின் சொகுசுக் காரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பயணம் செய்துள்ளது உலக நாடுகளிடையே பேசும் பொருளாகி உள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் பரிசளித்த லிமோசின் சொகுசுக் காரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பயணம் செய்துள்ளது உலக நாடுகளிடையே பேசும் பொருளாகி உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்யாவில் விளாடிமிர் புதின் நடத்திய மாநாட்டில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் இரு நாடுகளிடையே உறவுகள் வலுப்படுத்தும் விதமாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் கிம் ஜாங் உன்-க்கு அவ்ருஸ் லிமோசின் என்ற சொகுசுக் காரை புதின் பரிசளித்தார். அந்தக் கார் கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யாவிலிருந்து வடகொரியாவிற்கு வந்து சேர்ந்தது. அந்தக் காரில், இதுவரை பயணிக்காதவர், கடந்த வெள்ளிக்கிழமை பயணித்ததாக, ஜிம் ஜாங் உன்-ன் தங்கையும், வடகொரிய அரசின் முக்கிய அதிகாரியுமான கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார். மேலும், வட கொரிய அதிபரின் கார் பயணம், இரு நாட்டு உறவுகள் வலுப்பெற்றுள்ளதற்கு சரியான சான்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?