தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்ப CAA சட்டம் அமல் : ஜெயக்குமார் ஆவேசம்...

"பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என பாஜக நினைத்தால்  அதனை எதிர்த்து அதிமுக  போராடும்"

Mar 12, 2024 - 20:14
தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்ப CAA சட்டம் அமல் : ஜெயக்குமார் ஆவேசம்...

தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்பவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் சென்னை ராயபுரத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று திமுக அரசைக்  கண்டித்து முழக்கம் எழுப்பினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "தேர்தல் பத்திர விவகாரம் நாட்டில் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தை திசை திருப்பவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது" என குற்றம்சாட்டினார். 

"பூர்வீக குடிமக்களாக உள்ள இஸ்லாமியர்களுக்கு முழுமையான பாதுகாப்பை அதிமுக வழங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாட்டைப் பிளவுபடுத்தி பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என பாஜக நினைத்தால்  அதனை எதிர்த்து அதிமுக  போராடும். இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு என்றும் உறுதுணையாக அதிமுக இருக்கும். தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டங்களை அமல்படுத்த விடமாட்டோம்" எனவும் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow