லாரியில் ஆற்று நீரை திருடிய வடமாநிலத்தவர்கள் கைது... விவசாயிகள் மகிழ்ச்சி...
நீர்பாசன கால்வாயில் இருந்து லாரி மூலம் மோட்டர் வைத்து தண்ணீர் திருடிய வடமாநிலத்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு நீர்பாசன கால்வாயில் இருந்து லாரி மூலம் மோட்டர் வைத்து தண்ணீர் திருடிய வடமாநிலத்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப் பெரியாறு நீர்பாசன கால்வாய் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் விவசாய நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி செய்கின்றனர் அப்பகுதி விவசாயிகள். பொதுப்பணித்துறை மூலம் விவசாயிகளுக்கு நாள்தோறும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியில் உள்ள உத்தமுத்து கால்வாயில், கடந்த சில தினங்களாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வடமாநில பதிவு எண் கொண்ட லாரியில், மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் எடுத்துச் சென்றுள்ளனர். இதை பார்த்து விவசாயிகள் கவலையடைந்த நிலையில், இதுகுறித்து, உத்தமபாளையம் காவல்நிலைத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்களை கைது செய்து, அவர்களின் லாரி மற்றும் மோட்டார் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
What's Your Reaction?