அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் நடிகைகள்... வழக்கு பாய்ந்ததும் மன்னிப்பு கேட்ட காந்தராஜ்..!
சினிமா நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறார்கள் என்று பேசி சர்ச்சையை கிளப்பியிருந்தார் பிரபல அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ். இதனையடுத்து அவர் மீது அடுத்ததடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தான் பேசியது தவறு என பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
கேரளாவை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பல்வேறு யூடியுப் சேனல்கள்களும் தனித்தனியாக இன்வெஸ்டிக்கேட்டிவ் ஸ்டோரிகள், திரை பிரபலங்களிடம் அதுகுறித்து நேர்காணல் செய்வது போன்ற பல்வேறு விஷயங்கள செய்தன. மலையாள சினிமாவை போலவே கோலிவுட்டிலும் உள்ளதா என்ற கோணத்தில் மூத்த நடிகைகள், 70ஸ் முதல் 2கே நடிகைகள் வரை ஒவ்வொரு காலக்கட்டத்தைச் சேர்ந்த நடிகைகளை அழைத்து நேர்காணல்கள் எடுக்கப்பட்டன. அதோடு, சில பிரபலங்களும் இதுகுறித்து பல நேர்காணல்களில் பேசி வந்தனர்.
இந்த வரிசையில் மூத்த அரசியல் விமர்சகரான டாக்டர் காந்தர்ராஜும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அதாவது, நடிப்பதற்காக அட்ஜெஸ்மென்ட்டிற்கு ஓகே சொல்லிவிட்டு, பல வருடங்கள் கழித்து நடிகைகள் புகார் அளிக்கின்றனர். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்தே அட்ஜெஸ்மென்ட் இருந்து வருகிறது. இயக்குநர்கள், நடிகர்கள் மட்டுமல்ல இன்னும் சில டெக்னிஷியன்களையும் நடிகைகள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டிய நிலையில் தான் இருக்கிறார்கள் என்று காந்தராஜ் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
காந்தர்ராஜின் இந்த சர்ச்சைகுரிய பேச்சு இணையத்தில் வைரலானதோடு, பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளானது. இதனைத் தொடர்ந்து நடிகையும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டியின் தலைவருமான ரோகிணி, காந்தராஜின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அதோடு சென்னை கமிஷனர் அலுவலகத்திலும் காந்தராஜ் மீது விசாகா கமிட்டி புகார் அளித்திருந்தது. தன் வயதிற்கும் கல்வித் தகுதிக்கும் சம்பந்தமே இல்லாவதவாறு நடிகைகளின்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது தண்டனைக்குரிய செயல் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
விசாகா கமிட்டி சார்பில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, பொது இடத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் காந்தராஜ்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், தன்னுடைய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் காந்தராஜ். அதில், தனியார் தொலைக்காட்சிக்கு திரைப்பட நடிகைகள் குறித்து நான் கொடுத்த பேட்டி பலரின் மனதை புண்படுத்தி இருக்கிறது என்பதை அறிகிறேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. இருப்பினும் இந்தப் பேட்டி கொடுத்தற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று காந்தராஜ் தெரிவித்துள்ளார். இவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்டு விசாகா கமிட்டி கொடுத்த புகார் வாபஸ் செய்யப்படுமா? அல்லது அவர் கூறிய கருத்துக்கு தக்க தண்டனை கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
What's Your Reaction?