GOAT: வெளியானது கோட் செகண்ட் சிங்கிள்... விஜய் கேரக்டரில் செம்ம ட்விஸ்ட் இருக்குதே!
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தி கோட் படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை: தளபதி விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் தி கோட் படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அதன்படி நள்ளிரவு 12 மணிக்கு கோட் படத்தின் விஜய் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டது படக்குழு. மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளுடன் ரிலீஸான இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக விஜய் டபுள் ஆக்ஷனில் செம்ம மாஸ் காட்டியிருந்தார். இதனால் கோட் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்திருந்தனர்.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள கோட் செகண்ட் சிங்கிளில், விஜய் ரசிகர்களுக்கு தரமான சர்ப்ரைஸ் வைத்துள்ளார் வெங்கட் பிரபு. மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதற்கு முன்பே கோட் செகண்ட் சிங்கிள் ரிலீஸாகிவிட்டது. யுவன் இசையில் சின்ன சின்ன கண்கள் என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இப்பாடலை விஜய்யும் பவதாரிணியும் இணைந்து பாடியுள்ளனர். மறைந்த பவதாரிணியின் குரல் ஏஐ டெக்னாலஜியில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பாடல் வரிகளை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். யுவனின் இசை பழைய பாடல்களை நினைவுப்படுத்தினாலும் விஜய்யின் குரல் இனிமையாக இருப்பதாக ரசிகர்கள் ரியாக்ட் செய்து வருகின்றனர்.
மேலும், மெலடியாக உருவாகியுள்ள இந்தப் பாடலில் விஜய்யும் சினேகாவும் நடித்துள்ளனர். படத்தில் இது விஜய்யின் ஃபேமிலி பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சினேகாவுடன் சிறுவன் ஒருவனும் நடித்துள்ளதால், இது ஜூனியர் விஜய் என்பதை ரசிகர்கள் உறுதி செய்துவிட்டனர். ஆனால், இப்பாடலில் சினேகா கர்ப்பமானதாக காட்சிகள் உள்ளன. எனவே அது இன்னொரு விஜய்யாக இருக்கலாம் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேநேரம் சினேகாவும் அவரது வயிற்றில் இருக்கும் குழந்தையையும் வில்லன்கள் கொலை செய்துவிடுவார்கள். அதற்கு அப்பா, மகன் கேரக்டரில் வரும் இரண்டு விஜய்யும் இணைந்து வில்லன்களை பழிவாங்குவது தான் கோட் படத்தின் கதை என்றும் கூறி வருகின்றனர்.
எது எப்படியோ கோட் படத்தில் வெங்கட் பிரபு டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைத்து ட்ரீட் கொடுப்பார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், தி கோட் படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பருக்கு தள்ளிப் போகலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், சொன்னபடி செப்டம்பர் 5ம் தேதி தி கோட் வெளியாகும் என்பதையும் இன்றைய அப்டேட்களில் படக்குழு உறுதி செய்துள்ளது. கோட் படத்தின் ரிலீஸ் தேதி குழப்பமும் முடிவுக்கு வந்துள்ளதால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
What's Your Reaction?