”தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரிக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது” - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரிக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். 

Oct 18, 2024 - 18:12
”தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரிக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது” - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

சென்னை சேப்பாக்கம் டிடி அலுவலகத்தில் இந்தி மாதம் கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் சென்னை தொலைகாட்சி பொன்விழா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சி தொடங்கும் முன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது "தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரியை விட்டு பாடியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் இந்தி மொழி கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் இந்த நிறைவு விழாவில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி ,இந்தி மொழி விழா கொண்டாடப்படுவது மூலம் இந்தி மொழி திணிக்கப்படுகிறது என கூறுகின்றனர் இந்தியாவில் உள்ள அனைத்து மொழியும் கொண்டாடப்பட வேண்டியவை எனவே இந்தி மொழி திணிக்கப்படவில்லை.

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் என பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளேன் இந்தி மொழி கற்க மிக பெரிய ஆர்வம் உள்ளது இங்கு வந்த நேரத்தில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு என கூறினார்கள். ஆனால் மக்களை பார்க்கும் போது அப்படி இல்லை என தெரிந்துக் கொண்டேன்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் உள்ள மொழிகளை VERNACULAR மொழி என கூறினார்கள். அப்படி என்றால் அடிமைகள் மொழி என அர்த்தம். இதனை எதிர்த்து பாரதியார் மிக பெரிய எதிர்ப்பை தெரிவித்தார். அவர்தமிழ் ஆங்கிலத்தை விட அறிவியல் ரீதியாகவும், கலாச்சாரம் ரீதியாகவும் சிறந்தது என கூறினார்.

ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு சென்றாலும் ஆங்கில மொழிக்கு நாம் அடிமையாக இருந்தோம். அதனால் இந்தியாவின் மொழிகள் பெரிய அளவில் வளரவில்லை. பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ் மிக பழமை வாய்ந்த மொழி அதில் நாம் பெருமைப்படுகிறேன்” என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறிய ஆளுநர் கடந்த 50 ஆண்டுகளில் மக்கள் மத்தியில் விஷம் பரப்பட்டு உள்ளது” என குற்றம்சாட்டினார்.

மேலும், “தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து சமஸ்கிருதம் நீக்கப்பட்டு உள்ளது என கூறிய ஆளுநர் இந்தியாவில் இருந்து பிரிக்கவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,இந்தியா எப்போதும் ஒன்றாகவே உள்ளது எப்போதும் ஒன்றாகவே உள்ளது. இந்தியாவின் பெருமை மிக்க மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.  தமிழகத்தில் இருந்து ஆன்மிகம் நாடு முழுவதும் சென்றுள்ளது. இந்தியாவின் பலமாக தமிழ்நாடு உள்ளது எப்போதும் அது இருக்கும். 

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது என கூறிய ஆளுநர் தமிழ் தமிழ் என பேசும் நபர்கள் இந்தியாவில் தமிழகத்தை விட்டு வெளியே தமிழை எடுத்து செல்ல என்ன செய்தனர்? தமிழ் தமிழ் என பேசும் நபர்கள் தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. தமிழுக்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என்றார். 

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழத்தில் தமிழ் மொழி கற்றுக்கொடுக்கும் விதம் மிக சிறப்பாக இல்லை என கூறிய ஆளுநர், ”மக்களை வைத்துகொண்டு தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர். தமிழகத்தில் மட்டுமே மூன்றாவது மொழியை அனுமதிக்க மறுகின்றனர். மற்ற அனைத்து மாநிலங்களிலும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்தி IMPOSITION என கூறி வேறு எந்த ஒரு மொழியும் வர விடவில்லை, காரணம் இந்தியாவில் இருந்து தமிழக மக்களை பிரிக்க நினைக்கின்றனர்” என தெரிவித்தார்.

மொழி மூலம் பிரிப்பது மூலம் கலாச்சாரத்தை அழிக்க முடியும் என தெரிவித்த ஆளுநர், தமிழகத்தில் உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்கள் 75 சதவீத மாணவர்கள் இரண்டு இலக்கு எண்களை கூற முடியாது என ஆய்வுகள் கூறுகிறது என்றும்,  78 சதவீத மாணவர்கள் இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்க முடியாது என ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் 100% வெற்றி என கூறுகின்றனர். தமிழகத்தில் கல்வி தரம் கீழ் இறங்குவதை பார்க்க முடியாது என கூறிய ஆளுநர் தமிழகத்தில் மிக பெரிய அளவில் PHD பட்டம் பெறுகின்றனர். ஆனால் அதில் 1% கூட மத்திய அரசின் உயர்கல்வி ஆய்வுகளுக்கு எடுத்துகொள்ள முடியாத நிலையில் உள்ளது என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow