மீண்டும் ஷாக் நியூஸ்: தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்வு
இரண்டு தினங்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,02,000க்கு விற்பனை ஆனது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.50 ஒரு கிராம் ரூ.12,750க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதே போன்று சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.272க்கும் கிலோவுக்கு ரூ.5000 குறைந்து, கிலோ வெள்ளி ரூ.1,02,000 விற்பனை ஆனது. சற்றே குறைந்து வரும் தங்கம், வெள்ளி விலையால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து இருந்தனர்.
இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 268 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?

