சந்தையில் அறிமுகமானது Honda Shine 100 DX: என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
பைக் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஹோண்டா, சந்தையில் Honda Shine 100 DX மற்றும் CB125 ஹார்னெட் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் போட்டிகள் அதிகரித்து வரும் இருசக்கர வாகன உற்பத்தியில் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப புதிய மாடல் பைக்குகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது ஹோண்டா நிறுவனம். அந்த வகையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள Honda Shine 100 DX பைக் மாடலின் சந்தை விலை மற்றும் சிறப்பம்சங்களை இப்பகுதியில் காணலாம்.
Honda Shine 100 DX பைக்:
இது ஏற்கனவே உள்ள Shine 100 மாடலின் மேம்படுத்தப்பட்ட, பிரீமியம் பதிப்பாகும். இதன் இருக்கையானது பின்னால் அமருபவர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்-ஷோரூம் விலை:
Honda Shine 100 DX பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹74,959 (டெல்லி). இது அடிப்படை Shine 100 மாடலை விட சுமார் ₹6,000 வரை அதிகம். பல்வேறு நகரங்களில் இதன் ஆன்-ரோடு விலையானது டிரான்ஸ்போர்ட் மற்றும் வரிகளின் அடிப்படையில் மாறுபடும். உதாரணமாக, சென்னையில் ஆன்-ரோடு விலை ₹89,991 வரை இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டிசைன் மற்றும் தோற்றம்: Shine 100 DX, அதன் ஸ்டாண்டர்டு மாடலை விட சில புதிய மாற்றங்களைக் கொண்டுள்ளது. இந்த பைக்கில் புதிய கிராபிக்ஸ், ஹெட்லேம்ப் கவுல் மற்றும் மஃப்ளரில் குரோம் இன்சர்ட்டுகள், மற்றும் சற்று அகலமான 10-லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் ஆகியவை இந்த மாடலில் இடம்பெற்றுள்ளன.
என்ஜின்: 98.98 CC-யுடன் சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 7.28 bhp ஆற்றலையும், 8.04 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த என்ஜின் 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சஸ்பென்ஷன்: பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 5-ஸ்டெப் அட்ஜஸ்டபிள் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன.
பிரேக்குகள் மற்றும் டயர்கள்: முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் ட்ரம் பிரேக்குகள் உள்ளன. இருபுறமும் 17-இன்ச் அலாய் வீல்களும், டியூப்லெஸ் டயர்களும் இடம்பெற்றுள்ளன.
நிறங்கள்: இந்த பைக் நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது: Pearl Igneous Black, Athletic Blue Metallic, Imperial Red Metallic, மற்றும் Geny Gray Metallic.
இந்தியாவில் 100-110 CC பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் Hero Splendor, Hero HF Deluxe போன்ற பைக்குகள் ஏற்கெனவே சந்தையில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளன. TVS Radeon, Bajaj Platina போன்ற மற்ற நிறுவனங்களின் பைக்குகளுக்கும் பொதுமக்கள் மத்தியில் மவுசு உள்ள நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Honda Shine 100 DX சந்தையில் என்ன மாதிரியான இடத்தை பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?






