வாட்ஸ் அப் செயலியில் வந்தாச்சு 'Advanced Chat Privacy' .. இதனால் என்ன யூஸ்?

வாட்ஸ் அப் செயலியில் 'Advanced Chat Privacy' என்கிற புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் என்ன விதமான பயன்கள் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

Apr 25, 2025 - 10:29
வாட்ஸ் அப் செயலியில் வந்தாச்சு 'Advanced Chat Privacy' .. இதனால் என்ன யூஸ்?
whatsapp app officially added the advanced chat privacy feature

மெட்டா பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் கீழ் வாட்ஸ் அப், முகப்புத்தகம், இன்ஸ்டா போன்ற முக்கிய சமூக வலைத்தள செயலிகள் இயங்கி வருகின்றன. மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மெட்டா நிறுவனம் புதுப்புது அப்டேட்களை தொடர்ந்து பயனர்களுக்கு வழங்கி வருகிறது.

அந்த வகையில், நாம் வாட்ஸ் அப் குழுவிலோ அல்லது தனிப்பயனர் உடனான உரையாடலை மற்றவர்களுக்கு பகிருவதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'Advanced Chat Privacy'  என்பதனை ஆன் செய்வதன் மூலம் நீங்கள் குழுவில் அனுப்பும் புகைப்படங்கள்/வீடியோக்களை மற்றவர்கள் டவுன்லோடு செய்யும் (ஆட்டோமெட்டிக் முறையாக இருப்பினும்) முறையை தடுக்க முடியும், மேலும் குழுவின் ஒட்டுமொத்த உரையாடலை மற்றவர்கள் எக்ஸ்போர்ட் (Export) செய்யாமல் தடுக்க முடியும்.

ஏற்கெனவே வாட்ஸ் அப் செயலியில் end-to-end encryption, chat lock போன்ற அம்சங்கள் இருக்கும் சூழ்நிலையில், இந்த 'Advanced Chat Privacy’ ஆப்ஷன் என்பது கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை பயனர்களுக்கு வழங்கும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஆப்ஷன் மூலம் குழுவில் உள்ளவர்களால் செய்திகளை பார்க்க முடியுமே தவிர, மற்றவர்களுக்கு எந்த வகையிலும் பகிர இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advanced Chat Privacy அம்சம், தற்போது பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் iOS மற்றும் Android ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலியினை பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow