மழை வெளுத்து வாங்கப்போகுது மக்களே...ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்
எட்டு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
எட்டு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக திருச்சி, மதுரை, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 32 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டியது. தலைநகர் சென்னையிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் கோரத்தாண்டவம் மிக அதிகமாக இருந்தது. வெயிலில் இருந்து விடுதலை கிடைக்காதா? என மக்கள் ஏங்கித் தவித்த நிலையில், சென்னையில் கடந்த 1 வாரமாக கனமழை கொட்டி வருகிறது.
இதனால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவியது. இதேபோல் சென்னையை ஒட்டியுள்ள புறநகர் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று மாலை பரவலாக மழை கொட்டியது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், அடையாறு, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சில இடங்களில் மழையும் கொட்டியது.
இந்நிலையில், எட்டு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருபத்தூர், திருவண்ணாமலை ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் வெளியே செல்வோர் குடையை எடுத்து செல்லுமாறும், பணியில் இருந்து வீடு திரும்பியவர்கள் இளையராஜா பாடலையும், சுடச் சுட பஜ்ஜியையும் சாப்பிட்டு வைப் செய்யுமாறும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
What's Your Reaction?