மிக மோசமான அளவுக்கு சென்ற காற்றின் தரம்..வெண் நுரை பொங்கி செல்லும் யமுனை ஆறு
டெல்லியில் மிக மோசமான அளவுக்கு காற்றின் தரம் சென்றுள்ள நிலையில், யமுனை ஆற்றில் நுரை பொங்கி செல்வது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் மிக மோசமான அளவுக்கு காற்றின் தரம் சென்றுள்ள நிலையில், யமுனை ஆற்றில் நுரை பொங்கி செல்வது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் குளிர்காலம் என்பதால் நள்ளிரவு கடுமையான பனி கொட்டி வருகிறது. இதேவேளையில் காற்றின் தரம் 300-ஐ தாண்டியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
குறிப்பாக ஆனந்த் விஹார் பகுதியில் மிக மோசமான அளவாக 334-ஐ தொட்டுள்ளது. இந்தியா கேட், எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் 250 முதல் 300 என்ற அளவில் காற்றின் தரம் உள்ளது. சராசரியாக 100 முதல் 150 வரை காற்றின் தரக்குறியீட்டு எண் இருக்க வேண்டிய நிலையில், நேரதிராக உள்ளதால் வெளியே செல்ல முடியாமலும், சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமலும் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுபோக, டெல்லியில் பாய்ந்தோடும் யமுனை ஆற்றில் வெண் நுரை பொங்கி செல்கிறது. டெல்லி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரின் காரணமாக, இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனிடையே விடுமுறை தினத்தை முன்னிட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் யமுனை ஆற்றை தூய்மை படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மனிதனின் அடிப்படை தேவையான காற்றும் நீரும் கடுமையாக மாசடைந்துள்ளதால் மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
What's Your Reaction?