"திமுக கூட்டணிக்கே எங்கள் ஆதரவு"  - எம்.ஜே.கே தலைவர் தமிமுன் அன்சாரி உறுதி...

திமுக கூட்டணிக்கே எங்கள் ஆதரவு என்று அறிவித்தார் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி.

Mar 19, 2024 - 13:54
"திமுக கூட்டணிக்கே எங்கள் ஆதரவு"  - எம்.ஜே.கே தலைவர் தமிமுன் அன்சாரி உறுதி...

மனிதநேய ஜனநாயகக் கட்சி, வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, இன்று (19.3.2024) திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். அப்போது, வரும் மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவாக செயல்படும் என்று உறுதியளித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி, வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறினார். 

திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படாத நிலையில், தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கும் சீட் ஒதுக்கப்படாது என தெரிகிறது.

கடந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிமுன் அன்சாரி அதிமுகவுடன் கூட்டணி வைத்து சட்டப்பேரவை உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow