2026-ல் இந்தியாவின் Top 10 பணக்காரர்கள்... அம்பானியை பின்னுக்குத் தள்ளிய அதானி! டாப் 10 லிஸ்ட் இதோ!
இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
M3M Hurun India Rich List 2026 வெளியிட்டுள்ள தகவலின்படி, கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பம் இந்தியாவின் அதிக சொத்து மதிப்பு கொண்டவர்களாக முதலிடத்தை பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானி குடும்பம் தற்போது இரண்டாவது இடத்துக்கு சென்றுள்ளது.
இந்தப் பட்டியலில் கவுதம் அதானி குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.9.23 லட்சம் கோடியாகவும், முகேஷ் அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.8.63 லட்சம் கோடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. அதானி குடும்பத்தின் சொத்து மதிப்பு ஓராண்டில் 13 சதவிகிதம் உயர்ந்த நிலையில், அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு 10 சதவிகிதம் குறைந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
மூன்றாவது இடத்தில் ArcelorMittal நிறுவனத்தைச் சேர்ந்த லட்சுமி நிவாஸ் மிட்டல் மற்றும் குடும்பம் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு ரூ.3.39 லட்சம் கோடி. Serum Institute of India-வைச் சேர்ந்த சைரஸ் பூனாவாலா குடும்பம் ரூ.3.03 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ளது.
HCL நிறுவனத்தைச் சேர்ந்த ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா குடும்பம் ரூ.2.79 லட்சம் கோடியுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து குமார் மங்கலம் பிர்லா குடும்பம், சன் பார்மாசூட்டிகல்ஸின் திலீப் ஷாங்க்வி, விப்ரோவின் அசிம் பிரேம்ஜி குடும்பம், வேதாந்தாவின் அனில் அகர்வால் குடும்பம் மற்றும் டோரன்ட் பார்மாவின் சமீர் மேத்தா குடும்பம் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
இந்தியாவின் Top 10 பணக்காரர்கள்
- கவுதம் அதானி & குடும்பம் – ரூ.9.23 லட்சம் கோடி
- முகேஷ் அம்பானி & குடும்பம் – ரூ.8.63 லட்சம் கோடி
- லட்சுமி நிவாஸ் மிட்டல் & குடும்பம் – ரூ.3.39 லட்சம் கோடி
- சைரஸ் பூனாவாலா & குடும்பம் – ரூ.3.03 லட்சம் கோடி
- ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா & குடும்பம் – ரூ.2.79 லட்சம் கோடி
- குமார் மங்கலம் பிர்லா & குடும்பம் – ரூ.2.69 லட்சம் கோடி
- திலீப் ஷாங்க்வி – ரூ.2.65 லட்சம் கோடி
- அசிம் பிரேம்ஜி & குடும்பம் – ரூ.2.63 லட்சம் கோடி
- அனில் அகர்வால் & குடும்பம் – ரூ.2.08 லட்சம் கோடி
- சமீர் மேத்தா & குடும்பம் – ரூ.1.89 லட்சம் கோடி.
மொத்தமாக, ரூ.1,000 கோடி அல்லது அதற்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட 1,810 பேரை இந்தப் பட்டியல் உள்ளடக்கியுள்ளது. இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.187.5 லட்சம் கோடியாக இருப்பதாக Hurun தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் டாலர் பில்லியனர்களின் எண்ணிக்கை 391 ஆக உயர்ந்துள்ளது
What's Your Reaction?