'ஜன நாயகன்' படத்திற்கு 'A' சான்றிதழ்... 43 நொடிகள் நீக்கம்... ?

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) 'A' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் கடந்த சில மாதங்களாக படத்தின் தணிக்கை மற்றும் வெளியீடு தொடர்பாக நிலவி வந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Jul 9, 2026 - 19:00
'ஜன நாயகன்' படத்திற்கு 'A' சான்றிதழ்... 43 நொடிகள் நீக்கம்... ?

தற்போது வெளியாகியுள்ள தணிக்கை விவரங்களின்படி, 'ஜன நாயகன்' திரைப்படத்தின் மொத்த நீளம் 183.11 நிமிடங்கள், அதாவது 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ஆகும். ஆரம்பத்தில் படத்தின் நீளம் சுமார் 3 மணி நேரம் 5 நிமிடங்களாக இருந்த நிலையில், தணிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி 43 நொடிகள் நீக்கப்பட்டு 'A' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் தணிக்கைச் சான்றிதழில், இயக்குநராக எச். வினோத், இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், படத்தொகுப்பாளராக பிரதீப் இ. ராகவ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. நடிகர்கள் பட்டியலில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. தயாரிப்பாளராக கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட நாராயண கோனங்கி பெயர் பதிவாகியுள்ளது.

இந்த திரைப்படம் விஜயின் அரசியல் பயணத்திற்கு முன் வெளியாகும் கடைசி படமாக கருதப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருந்த இப்படம் தணிக்கை உள்ளிட்ட காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 'ஜன நாயகன்' திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் வகையில் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. தணிக்கைப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow