நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கை முடித்து வைத்த சென்னை உயர் நீதிமன்றம் 

நீதிபதி, நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்தார்.

Jan 16, 2024 - 16:01
Jan 16, 2024 - 19:45
நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கை முடித்து வைத்த சென்னை உயர் நீதிமன்றம் 

நடிகர் சிவகார்த்திகேயனிடம் பிடித்தம் செய்யப்பட்ட டி.டி.எஸ் (TDS) தொகையில் 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்தி விட்டதாக வருமான வரித்துறை தெரிவித்ததை அடுத்து, வரி பிடித்தத்துக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், தனது நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்துக்காக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியதாக குறிப்பிட்டுள்ளார். 

 2019ஆம் ஆண்டு மே மாதமே படம் வெளியான நிலையில், சம்பளத்துக்கான டிடிஎஸ் தொகையை பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா, அதை வருமான வரித்துறையில் செலுத்தாததால், 2019-20, 2020-21ஆம் ஆண்டுகளுக்கான டிடிஎஸ் தொகை 91 லட்ச ரூபாயை தனது வங்கிக் கணக்கில் இருந்து வருமான வரித்துறை வசூலித்ததாகவும், அதை  திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, சிவகார்த்திகேயனுக்கும், ஞானவேல்ராஜாவிற்கும் இடையில் சுமூக தீர்வு ஏற்பட்டது. டிடிஎஸ் தொகை செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, சிவகார்த்திகேயனுக்கு திரும்ப வழங்க வேண்டிய 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வட்டியுடன் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதை பதிவு செய்த நீதிபதி, நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow