”அப்பாவ நகைச்சுவை கேரக்டர்ல பார்க்கனும்..” – ஜேசன் சஞ்சய் சொன்ன சுவாரஸ்ய பதில்..!
விஜய் தனது படத்தில் நடித்தால், அவரது நகைச்சுவை உணர்வை முழுவீச்சில் வெளிக்கொண்டு வர விரும்புவதாக அவரது மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் நிலையில், அவரிடம் விஜய்யை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவருடைய எந்த குணத்தை திரையில் வெளிக்கொண்டு வர விரும்புவீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜேசன் சஞ்சய் அளித்த பதில் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
“அப்பாவின் அந்த குணத்தை மீண்டும் பார்க்க வேண்டும்!”
விஜய்யின் நடிப்பில் ஆக்ஷன், மாஸ், எமோஷன் என பல்வேறு பரிமாணங்களை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். குறிப்பாக, ஆரம்பகால படங்களில் விஜய்யின் இயல்பான நகைச்சுவை உணர்வும், காமெடி காட்சிகளில் அவர் வெளிப்படுத்திய உடல்மொழியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவை. ஆனால், சமீப ஆண்டுகளில் அவரது படங்களில் மாஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளே அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், விஜய்யின் நகைச்சுவை உணர்வை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே தனது விருப்பம் என அவரது மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நகைச்சுவை உணர்வு. இதுபோன்ற கதாபாத்திரங்களில் முழுவீச்சில் அவர் நடிப்பதை நாம் பார்ப்பது நின்றுவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், விஜய்யை வழக்கமான மாஸ் ஹீரோவாக காட்டுவதற்கு பதிலாக, அவரது காமெடி திறமையை மையமாகக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் பார்க்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை ஜேசன் சஞ்சய் வெளிப்படுத்தியிருக்கிறார்.
விஜய்யின் பழைய படங்களில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகளையும், அவரது இயல்பான காமெடி டைமிங்கையும் நினைவுகூரும் ரசிகர்களுக்கு, ஜேசன் சஞ்சயின் இந்த பதில் நிச்சயம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பா–மகன் கூட்டணி ஒருநாள் திரையில் உருவானால், விஜய்யின் இந்த இன்னொரு முகத்தை ஜேசன் சஞ்சய் வெளிக்கொண்டு வருவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
இந்த நிலையில், மகனுக்காக சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுப்பாரா விஜய்? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
What's Your Reaction?