நேற்று பதவி விலகிய ஆம் ஆத்மி அமைச்சர் - இன்று பாஜகவில் இணைந்ததால் திருப்பம்
ஆம் ஆத்மி கட்சிக்குள் கடுமையான சிக்கல்கள் உள்ளதாக நேற்று கைலாஷ் கெலாட் நேற்று குற்றம்சாட்டி இருந்தார்.
டெல்லி போக்குவரத்துத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து நேற்று விலகிய ஆம் ஆத்மியின் கைலாஷ் கெலாட், இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஆம் ஆத்மியின் கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட் நேற்று அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் எழுதி கடிதத்தில், “ ஆம் ஆத்மி கட்சிக்குள் கடுமையான சிக்கல்கள் உள்ளது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வை அரசியல் ஆசைகள் முந்திவிட்டது. மேலும் மத்திய அரசுடன் மோதல் போக்கை கொண்டிருப்பதால் டெல்லி மாநிலம் வளர்ச்சி அடையாது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அதிஷியுடனும், ஆம் ஆத்மி கட்சி தலைமையுடனும் கைலாஷ் கெலாட் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்ததால் பதவி விலகியதாக கூறப்பட்டது.இந்த நிலையில், டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் முன்னிலையில் டெல்லி முன்னாள் அமைச்சரும், ஆம் ஆத்மியின் மூத்த தலைவருமான கைலாஷ் கெலாட் இன்று பாஜகவில் இணைந்தார். இதனால் டெல்லி அரசியல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?