ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு தேதி மாற்றம்..தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Apr 30, 2024 - 21:41
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு தேதி மாற்றம்..தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியில் மே 7-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு, மே 25-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு அதன்படி நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதையடுத்து 2-ம் கட்டமாக, ஏப்ரல் 26-ம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது. தொடர்ந்து மக்களவைத் தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ம் தேதி 10 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் 3-ம் கட்ட தேர்தலில் ஜம்மு காஷ்மீரின், அனந்த்நாக்-ரஜோரி தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்குப்பதிவு மே 25-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அரசியல் கட்சிகளிடம் இருந்து வந்த பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் வாக்குப்பதிவு தேதி மாற்றப்பட்டுள்ளது. இயற்கைத் தடைகள் பிரசாரத்திற்கு இடையூறாக மாறிவிட்டதால், இது வேட்பாளர்களின் நியாயமான வாய்ப்புகள் மற்றும் தேர்தல் நடைமுறையை பாதிக்கலாம். எனவே மே 25-ம் தேதி 6-ம் கட்டமாக நடக்கும் தேர்தலோடு அனந்த்நாக்-ரஜோரி தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow