விறுவிறுப்பாக நடக்கும் அனிருத் கல்யாண வேலைகள்...CM விஜய்க்கு அழைப்பு!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் - காவ்யா கலாநிதி மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன் நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

Oct 17, 2026 - 16:00
Oct 17, 2026 - 14:59
விறுவிறுப்பாக நடக்கும் அனிருத் கல்யாண வேலைகள்...CM விஜய்க்கு அழைப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தரும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா கலாநிதி மாறனும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவர்களது திருமணம் தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.

இந்த நிலையில், அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்த சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன், காவ்யா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார். இந்தச் சந்திப்பின்போது காவேரி கலாநிதி மாறன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரும் உடனிருந்தனர்.

ஏற்கெனவே, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியைச் சந்தித்த கலாநிதி மாறன், தனது மகளின் திருமண வரவேற்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow