ராஜா சார்ட போய் நான் யாருனு சொல்லுறது..இசையமைப்பாளர் சாம் சி.எஸ் ஓபன் டாக்

தென்னிந்திய சினிமா, பாலிவுட் என பரபரப்பாக இயங்கி வரும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் குமுதம் இதழுக்காக அளித்த சிறப்பு நேர்க்காணலில் நா.முத்துக் குமாரை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் என தெரிவித்துள்ளார்.

Apr 1, 2025 - 14:59
Apr 1, 2025 - 15:01
ராஜா சார்ட போய் நான் யாருனு சொல்லுறது..இசையமைப்பாளர் சாம் சி.எஸ் ஓபன் டாக்
music composer sam cs interview

விக்ரம் வேதா, கைதி மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் பிரியத்திற்குரிய இசையமைப்பாளர்களில் ஒருவரான சாம் சி.எஸ் காட்டில் தற்போது அடைமழை பெய்கிறது எனலாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பம்பரமாக சுற்றி வருகிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் குமுதம் இதழுக்காக இசையமைப்பாளர் சாம் சி.ஸ் பிரத்யேக நேர்க்காணல் ஒன்றினை வழங்கியுள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு-

இசையுடன் தான் உங்கள் வாழ்க்கை என நினைத்தீர்களா?

"நான் நினைச்சு சினிமாவுக்கு வரலை. தற்செயல் விபத்தா, எதிர் பார்க்காம உள்ளே வந்தேன். எனக்கும் மியூசிக் ரொம்பப் பிடிக்கும். சர்ச்ல பிளே செய்த போதும், ஆர்கெஸ்ட்ரா பண்ணும்போதும் மியூசிக் டைரக்டராவேன்னு நினைச்சுப் பார்க்கலை. சென்னை வந்த பிறகும்கூட இப்படி ஆவேன்னு தெரியாது. ஐ.டி. வேலைக்காக சென்னைக்கு வந்தேன். இப்போ இசைதான் வாழ்க்கைன்னு மாறிடுச்சு. என் ஒவ்வொரு நாளும் இசையில் தொடங்கி இசையில் முடிவது வரம்”

தமிழ், தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக இயங்கும் மியூசிக் டைரக்டரான உங்களுக்கு கண்ணதாசன், வாலி காலத்தில் இசையமைப்பாளரா இல்லையேன்னு வருத்தம் இருக்கா?

அது ரொம்ப இருக்கு. 10 வருஷத்துக்கு முன்னாடி சொல்லணும்னா நா.முத்துக் குமாரை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்னு சொல்லலாம். நான் இசையமைச்ச ஒரு படத்துக்கு நா.முத்துக்குமார் பாடல் எழுதியிருக்கார். அவருடைய வரிகள் அற்புதமா இருக்கும். ஒரு பக்கம் யதார்த்தமாகவும், இன்னொரு பக்கம் சினிமாட்டிக்காகவும் இருக்கும். இப்பகூட ஒரு சோகப் பாட்டு கேட்க நினைச்சா, பறவையே நீ எங்கு இருக்கிறாய் பாடலைக் கேட்டா போதும். அந்தப் பாட்டை வெச்சு இன்னொரு டியூன்கூட போட்டுடலாம். அதே மாதிரி கவியரசரை பற்றிப் பேசுறதுக்குக்கூட எனக்கு தகுதி இருக்கான்னு தெரியலை.

யுவன் தயாரிப்பில் 'பியார் பிரேமா காதல்' பட நிகழ்ச்சிக்குப் போனேன் அப்போ ஒருத்தர் ராஜா சாரிடம் என்னை அறிமுகப்படுத்துறேன்னு கூப்பிட்டார். நான் போகலை, அவரிடம் 'என்னை என்னன்னு அறிமுகப்படுத்துவீங்க'ன்னு கேட்டேன் . கம்போஸரினு அறிமுகப்படுத்துவேன்னார் 'அப்போ நான் யாருன்னு ராஜ சார் கேட்டா. என்ன பண்றதுனு நான் சொன்னேன். 

உண்மையில் ராஜா சார் அப்படி கேட்க மாட்டார். ஆனா, அவர் முன்னாடி அப்படி போய் நிக்கற அளவு நான் என்ன பண்ணிட்டேங்கிறது. முக்கியம்ல" என்றார்.

(நேர்க்காணல் - லதா)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow