இதையெல்லாம் சூடு படுத்தி சாப்பிடாதீங்க! - எச்சரிக்கை ரிப்போர்ட்

அவசரமான வாழ்க்கை.. நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். தினமும் சமைக்க முடியுமா? ‘வாரம் ஒருநாள் வத்தக்குழம்பு, புளிக்குழம்பு, காரக்குழம்பு, ரசம், காரச்சட்னி.. இப்படி விதவிதமா செஞ்சு ஃப்ரிட்ஜ்ல வெச்சுட்டா தினம் ஒண்ணா எடுத்து சாப்பிட்டுக்கலாம். ஒரு வாரத்துக்கு பிரச்னையே இல்லை’ என்று சந்தோஷப்படும் இல்லத்தரசியா நீங்க.. உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை! 

இதையெல்லாம் சூடு படுத்தி சாப்பிடாதீங்க! - எச்சரிக்கை ரிப்போர்ட்
Don't heat this up and eat it! - Warning Report

எழுதியவர்- ஜெமினி தனா

முன்பே சமைத்து வைத்திருந்தாலும், சமைத்த உணவு மீதமிருந்தாலும் அதை  ஃப்ரிட்ஜுக்குள் வைத்து சாப்பிடுவது, வெளியில் எடுத்து சூடு செய்து சாப்பிடுவது… இரண்டுமே உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும் நீங்களே வைத்துக்கொள்ளும் ஆப்புதான்! பூச்சிக்கொல்லி மருந்துகள், உணவு கலப்படம்னு ஏற்கெனவே சத்தில்லாத உணவுகளையே சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். இதில் சமைத்த உணவை மீண்டும் சூடு செய்தால் அதில் இருக்கும் கொஞ்ச நஞ்ச சத்துக்களும் தொலைந்துபோய் சக்கைதான் மிஞ்சும். தவிர, அது உடலுக்கு எப்போதுமே நல்லதில்லை. இது ஒரு பக்கம் இருக்கட்டும். சில உணவுகளை இரண்டாவது முறை சூடு படுத்தி சாப்பிடவே கூடாது. அது தெரியுமா?

‘வாரத்தில் இரண்டு நாள் கீரை சாப்பிடணும்’ என்று கீரையை  சமைத்து விட்டு, ஃப்ரிட்ஜில் வைத்தால் ஜீரணம் சிக்கல் ஆகிவிடும். கீரைகளில் இருக்கும் இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட்டுகளானது சூடு செய்தால் நைட்ரேட்ஸ் ஆக மாறும். கொஞ்சம் அலட்சியமாக இருந்தால் கேன்சர் கூட வரலாம். கீரைகளை சூடு செய்யவே கூடாது. சமைத்த உடன் சாப்பிட்டுவிட வேண்டும். கீரையை இரவு உணவிலும் எடுத்துக்கொள்ளக் கூடாது. 

சிலரின் வீடுகளில் ஃப்ரிட்ஜ்ஜைத் திறந்தாலே மலை போல முட்டைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். முட்டையை அங்கே வைக்கலாம். ஆனால், முட்டையை வேகவைத்து  ஃப்ரிட்ஜில் வைத்தாலும் வெளியில் வைத்தாலும் மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது கூடாது. இது வயிற்றுக் கோளாறுகளை ஏற்படலாம். 

உருளைக்கிழங்கு  எல்லோருக்கும் பிடித்தமானது தான். சமைப்பதும் ஈஸி. டிபன் பாக்ஸில் கட்டிக்கொடுத்தால் மிச்சம் மீதியில்லாமல் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். அதுவும் சரிதான். ஆனால், முன் தினம் இரவிலேயே உருளைகிழங்கை வேகவைத்து  சமைத்து ஃப்ர்ட்ஜுக்குள் வைத்து மறுநாள் சூடு பண்ணிச் சாப்பிடுவது தப்போ தப்பு. சமைத்த உருளைக்கிழங்கில் பாக்டீரியா தங்கிவிடும். சூடுபடுத்தும்போது அதில் உள்ள பாக்டீரியா க்ளோஸ்ட்ரிடியம் போட்டுலினியம் ஆக மாறும். இது வாந்தி, குமட்டல் பிரச்னையை  ஏற்படும்.

அசைவ உணவு சாப்பிடுபவர்கள் குறிப்பாக கோழி இறைச்சியை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக்கூடாது.  புரதம் நிறைந்த இறைச்சி பொதுவாகவே  செரிமானத்தை மெதுவாக்கும். சூடு செய்து சாப்பிடும் போது அதில் உள்ள புரதம் ஃபுட் பாய்ஸனாக மாறும். கோழி இறைச்சியை சமைக்காமல் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்தால் ஈகோலை  மற்றும் பாக்டீரியா தங்கிவிடும். 

அப்படியானால் இதற்கெல்லாம் என்னதான் தீர்வு என்கிறீர்களா? தேவைக்கேற்ப வாங்கி, அவ்வப்போது சமைத்து, அளவோடு சாப்பிடுங்கள்.  ஆரோக்கிமா வாழுங்க!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow