கொளத்தூர் வெற்றி வழக்கு: ஸ்டாலின் மனு செல்லாது... நீதிமன்றம் அதிரடி..!

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Sep 3, 2026 - 11:44
கொளத்தூர் வெற்றி வழக்கு: ஸ்டாலின் மனு செல்லாது... நீதிமன்றம் அதிரடி..!

தேர்தல் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த வழக்கில், தேர்தல் முடிவு வெளியான 45 நாட்களுக்குள் உரிய முறையில் தேர்தல் வழக்கு தொடரப்படவில்லை என வி.எஸ். பாபு தரப்பில் வாதிடப்பட்டது.

காலதாமதத்தை மன்னித்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், தேர்தல் வழக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிய வகையில் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், மனு சட்டப்படி ஏற்புடையதல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, வி.எஸ். பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கொளத்தூர் தேர்தல் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow