லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய்... மனைவியையும் சந்திப்பாரா? நெட்டிசன்கள் கேள்வி!

முதலீடுகளை ஈர்க்க லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கு வசிக்கும் மனைவி சங்கீதாவை சந்திப்பாரா, இருவரும் மீண்டும் இணைவார்களா என்ற கேள்விகள் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Sep 1, 2026 - 13:00
லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய்... மனைவியையும் சந்திப்பாரா? நெட்டிசன்கள் கேள்வி!

தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் வரும் 10-ம் தேதி பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அரசு முறைப் பயணமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. அவருடன் தொழில்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவும் பயணிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனில் முதலீட்டாளர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, உயர் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் குறைக்கடத்தி உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், விஜய்யின் லண்டன் பயணம் குறித்த தகவல் வெளியானதுமே சமூக வலைதளங்களில் மற்றொரு விவாதமும் கிளம்பியுள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதா லண்டனில் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சரின் இந்தப் பயணத்தின்போது இருவரும் சந்திப்பார்களா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

மேலும், விஜய் - சங்கீதா தம்பதியரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர்கள் குறித்த விவாகரத்து வழக்கு தற்போது ஒரு முடிவை எட்டிய நிலையில், விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றிருந்தார் சங்கீதா. மீண்டும் விஜய்யுடன் சங்கீதா இணைந்து வாழ்வாரா? எப்போது சென்னைக்கு வருவார்? போன்ற கேள்விகள் விஜய் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. 
இந்நிலையில், லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய், தனது மனைவி சங்கீதாவை சந்திப்பாரா?, மீண்டும் இருவரும் இணைவார்களா? என்ற கேள்விகளும் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.

விஜய்யின் மனைவி சங்கீதாவை பொறுத்தவரை இலங்கைத் தமிழர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், நீண்ட காலமாக லண்டனில் வசித்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது. கடந்த 1996-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படத்தை பார்த்த பிறகு, அவரை பாராட்டுவதற்காக சங்கீதா சென்னை வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது விஜய்யை சந்தித்த சங்கீதா, பின்னர் அவரது குடும்பத்தினருடனும் பழகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு குடும்பங்களின் சம்மதத்துடன் விஜய் - சங்கீதா திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகே சங்கீதாவை காதலிக்கத் தொடங்கியதாக விஜய் பழைய பேட்டிகளில் கூறியிருந்ததும் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்ட விஷயமாகும்.

சங்கீதா மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள், லண்டனில் உள்ள தொழில் மற்றும் முதலீடுகள் குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தாலும், அவற்றின் மதிப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.

எனவே, விஜய்யின் லண்டன் பயணம் முழுக்க முழுக்க அரசு மற்றும் முதலீடு தொடர்பான நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் பயணத்தின்போது சங்கீதாவை அவர் சந்திப்பாரா? மீண்டும் இருவரும் இணைவார்களா? என்ற நெட்டிசன்களின் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow