விஜய்யின் லண்டன் விசிட்… த்ரிஷாவின் லண்டன் ஸ்பாட்டிங்… சர்ச்சையை கிளப்பும் நெட்டிசன்கள்..!

முதலமைச்சர் விஜய் தனது முதல் அரசு முறை வெளிநாட்டுப் பயணமாக லண்டன் செல்ல உள்ள நிலையில், நடிகை த்ரிஷா லண்டனில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Sep 1, 2026 - 16:00
விஜய்யின் லண்டன் விசிட்… த்ரிஷாவின் லண்டன் ஸ்பாட்டிங்… சர்ச்சையை கிளப்பும் நெட்டிசன்கள்..!

நடிகை த்ரிஷா தற்போது லண்டனில் தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அங்கு பிரபலமான சைனாடவுன் பகுதியில் அவர் நடந்து சென்றபோது, ரசிகர் ஒருவர் அவரை வீடியோ எடுத்துள்ளார். கருப்பு நிற ஜம்பர் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து மிகவும் எளிமையான தோற்றத்தில் த்ரிஷா காணப்பட்டார்.

த்ரிஷாவை எதிர்பாராதவிதமாக பார்த்த உற்சாகத்தில் அந்த ரசிகர் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால், அந்த வீடியோவுக்கு சில நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நண்பர்களுடன் தனிப்பட்ட நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்த நடிகையை அனுமதியின்றி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவது தேவையற்றது என்றும், பிரபலமாக இருந்தாலும் அவர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Trisha Krishnan’s private London outing filmed by fan, internet says ‘Leave them alone’.

இதற்கிடையே, த்ரிஷாவின் லண்டன் பயணம் மீண்டும் விஜய்யுடனான அவரது தொடர்பு குறித்த பழைய சமூக வலைதளப் பேச்சுகளையும் கிளறியுள்ளது. விஜய் - த்ரிஷா இருவரும் சில நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, இருவரையும் இணைத்து ஏற்கெனவே பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. ஆனால், இந்த தகவல்கள் குறித்து விஜய் அல்லது த்ரிஷா தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இல்லை.

இந்தச் சூழலில்தான், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் வரும் 10-ம் தேதி லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அரசு முறைப் பயணம் இதுவாக இருக்கும் என கூறப்படுகிறது. அவருடன் தொழில்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவும் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனில் முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்களை விஜய் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, உயர் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்தி உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தப் பயணம் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், முதலமைச்சர் விஜய் லண்டன் செல்ல உள்ள நேரத்தில், த்ரிஷாவும் லண்டனில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகியிருப்பது மீண்டும் சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

விஜய்யின் லண்டன் விசிட்... த்ரிஷாவின் லண்டன் ஸ்பாட்டிங்... பழைய சர்ச்சைகள்... இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் உண்மையில் என்ன நடக்கிறது? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow