குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்! திமுக மகளிரணி போராட்டம்

குஷ்புவின் புகைப்படத்தைக் காலணியால் தாக்கி, தீ வைத்து எரித்த பெண்கள்.

Mar 15, 2024 - 22:01
குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்! திமுக மகளிரணி போராட்டம்

மகளிர் உரிமைத் தொகை குறித்து சர்ச்சையாக பேசியதைக் கண்டித்து கோவையில் நடிகை குஷ்புவின் புகைப்படத்தை தீயிட்டு எரித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பு, தாய்மார்களுக்கு 1,000 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சை  போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா?” என கேள்வி எழுப்பியிருந்தார். அவரது கருத்து மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடுமையாக விமர்சிக்கும் வகையில் இருந்ததாக கூறி திமுகவினர் மற்றும் பெண்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், கோவை டாடாபாத், பவர் ஹவுசில் திமுக கோவை மாநகர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அன்னம்மாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது நடிகை குஷ்புவின் புகைப்படத்தைக் காலணியால் தாக்கி, தீ வைத்து எரித்தனர். மேலும், மகளிரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் முழக்கமிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow