மைசூரில் தமிழக கல்வெட்டுகள்!! தமிழ்நாட்டிற்கு மாற்றுவது எப்போது? உயர்நீதிமன்றம் அதிரடி...
மைசூரில் உள்ள தமிழக கல்வெட்டுகள் மற்றும் அதன் நகல்களை தமிழ்நாட்டிற்கு இடமாற்றம் செய்வது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மைசூரில் உள்ள தமிழக கல்வெட்டுகள் மற்றும் அதன் நகல்களை தமிழ்நாட்டிற்கு இடமாற்றம் செய்வது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் தமிழக கல்வெட்டுகளை மைசூரில் இருந்து கொண்டுவரக் கோரி மதுரையை சேர்ந்த மணிமாறன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கல்வெட்டுகள், பழைமையான சிலைகள் ஏராளமாக எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பழைமையான வரலாறு, பண்பாடு, வாழ்வியல் முறை குறித்து அவற்றிலிருந்து தெரிந்துகொள்ளலாம். கல்வெட்டுகளை நகலெடுக்கவும் பாதுகாக்கவும் சென்னையில் தொல்பொருள் ஆய்வு மையத்தில் கல்வெட்டுகள் இருந்தன. பிறகு இரண்டு முறை இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது மைசூரில் இருக்கின்றன.
1890-ம் ஆண்டு முதல் 65ஆயிரம் கல்வெட்டுக்களில் இருந்து எபிகிராப் முறையில் படியெடுக்கப்பட்ட எஸ்டம்பேஜ் எனும் 1லட்சம் கல்வெட்டு எழுத்துகள் குறித்த நகல்கள் மைசூரில் உள்ளன. இதில் பெரும்பாலானவை தமிழ் கல்வெட்டுகளில் இருந்து எடுக்கப்பட்டவை. அவற்றை மைசூருக்கு மாற்றம் செய்யும் போது ஏராளமான கல்வெட்டு நகல்கள், தரவுகள் சேதமடைந்தன. தமிழ்நாட்டு பாரம்பரியத்தைப் பறைசாற்றும் நிறைய கல்வெட்டுகள் காணாமல் போனதாக புகார்கள் எழுந்துள்ளன.
கல்வெட்டுகளை பாதுகாக்க இந்திய தொல்லியல் துறை உரிய நிதி ஒதுக்க வேண்டும். மேலும், கல்வெட்டு தகவல்களை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்து, அவற்றை தமிழகத்திற்கு மாற்றி பாதுகாக்க வேண்டும்" என்று தனது பொதுநல மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த இரு நீதிபதிகள் அமர்வு, இதுகுறித்து 4 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலு மத்திய அரசின் பதில் அறிக்கையின் படி இவ்வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.
What's Your Reaction?