6 மாணவிகளை சீரழித்த பள்ளி தலைமை ஆசிரியர்.. 47 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சிவகங்கை கோர்ட்

Apr 22, 2024 - 17:24
6 மாணவிகளை சீரழித்த பள்ளி தலைமை ஆசிரியர்..  47 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சிவகங்கை கோர்ட்

காளையார்கோவில் அருகே 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 47 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர், அருகே உள்ள கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு 4 மற்றும் 5-ம் வகுப்பு பயின்ற 6 மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முருகன் பாலியல் தொல்லை அளித்ததாக பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் பாட்டி சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ, தீண்டாமை ஒழிப்புச் சட்டம் உட்பட 10 பிரிவுகளின் கீழ் முருகனை போலீசார் கைது செய்தனர். 

இந்த வழக்கின் விசாரணை சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று மீண்டும் வழக்கு  விசாரணைக்கு வந்தபோது, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 47 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை விதித்து நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டார். அபராதமாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். 

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நிவாரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.29 லட்சம் வழங்க வேண்டும் எனவும் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் உத்தரவு பிறப்பித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow