"தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளா்களுக்கும் வாழ்த்துகள்" ஆயுத பூஜைக்கு தலைவர்களின் வாழ்த்து

ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Oct 11, 2024 - 07:21
"தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளா்களுக்கும் வாழ்த்துகள்" ஆயுத பூஜைக்கு தலைவர்களின் வாழ்த்து

ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நவராத்திரி விழாவின் இறுதியில், ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அன்னை பராசக்தியைப் போற்றி வணங்குகிறேன் என கூறியுள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீா்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளில், அன்னை மகா சக்தியின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும் என்றும்; வெற்றிகள் குவியட்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், அனைத்து நலன்களும், வளங்களும் தமிழக மக்களை சென்றடையட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அறிவைத் தரும் கல்வியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும், வளத்தையும் தரும், தொழிலையும் போற்றி வணங்கும் இந்த நன்னாளில், அனைவரும் சரஸ்வதிதேவியின் அருளைப் பெற்று, கல்வியிலும், தொழில்துறையிலும் சிறந்து விளங்க, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் சிறந்து விளங்கிட ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆா்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டு குடிமக்களின் வாழ்வாதாரத்துக்கு வேலை கொடுக்க வேண்டிய அரசின் கடமையை அறப்பணியாக செய்யும் தொழில் நிறுவனங்களுக்கும், நாட்டை முன்னேற்ற உழைக்கும் தொழிலாளா்களுக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow