இந்தி திணிப்புக்கான பரப்புரைக் கருவியாக LIC இணையதளம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது. இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழி திணிப்பு தவிர வேறில்லை.

இந்தி திணிப்புக்கான பரப்புரைக் கருவியாக LIC இணையதளம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

இந்தி திணிப்புக்கான பரப்புரைக் கருவியாக LIC இணையதளம் மாற்றப்பட்டுள்ளதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எல்ஐசி நிறுவனத்தின் இணையதள முகப்பு பக்கம் இன்று காலை முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. மேலும் மொழி என்பதை குறிக்கும் பாஷா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.எல்ஐசி நிறுவனத்தின் இணையதள பக்கம் முழுவதுமாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டதாக எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

எல்ஐசி நிறுவனத்தின் இனையதள முகப்பு பக்கம் இந்தி மொழியில் மாற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,  “எல்ஐசி இணையதளம் இந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது. இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழி திணிப்பு தவிர வேறில்லை. எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது. அதன் பங்களிப்பாளர்களில் பெரும்பான்மையினரைக் காட்டிக்கொடுக்க எவ்வளவு தைரியம்? இந்தி மொழியியல் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow