அமைச்சர் முன்னிலையில் தகாத வார்த்தையால் வசைப்பாடி வாக்குவாதம்- ராசிபுரம் திமுகவில் உட்கட்சி பூசல்?

இறுதியாக அமைச்சர் மதிவேந்தன் இருவரையும் சமாதானப்படுத்தி பூமி பூஜை செய்து அங்கு இருந்து புறப்பட்டார்

Nov 19, 2024 - 15:26
அமைச்சர் முன்னிலையில் தகாத வார்த்தையால் வசைப்பாடி வாக்குவாதம்- ராசிபுரம் திமுகவில் உட்கட்சி பூசல்?

ராசிபுரம் அருகே நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் தகாத வார்த்தைகளில் வசைப்பாடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கூனாவேலம்பட்டி,  குறுக்குபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்காக பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.அரசு நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார்.அப்போது குறுக்குபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வின்போது, குறுக்குபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் தனக்கு முறையாக அழைப்பு அளிக்கவில்லை என கூறி நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தனித்து நின்றார்.

அப்போது அமைச்சர் மதிவேந்தன் பூமி பூஜை நிகழ்விற்கு வருமாறு அழைத்தபோது அமைச்சர் மதிவேந்தனிடம் நான் ஏன் வரவேண்டும் நீங்களே நில்லுங்கள் என கூறினார்.அப்போது கட்சி நிர்வாகி பாலு  மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் போது கட்சி நிர்வாகி பாலு  தகாத வார்த்தையால் வசைப்பாடி திட்டிய நிலையில் அமைச்சர் மதிவேந்தன் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார்.

அமைச்சர் கூறியும் தொடர்ந்து இருவரும்  பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் தாக்க முயன்ற போது கட்சி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். இறுதியாக அமைச்சர் மதிவேந்தன் இருவரையும் சமாதானப்படுத்தி பூமி பூஜை செய்து அங்கு இருந்து புறப்பட்டார். அமைச்சர் முன்னிலையிலேயே கட்சி நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அங்குள்ள பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow