தவெக மாநாட்டில் சிங்கப்பெண்கள்...விஜய் பேசப்போகும் அரசியல் இதுவா...இறுதி கட்டத்தில் பணிகள் தீவிரம்

பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் வாசகத்தின் உருவக கட் அவுட், விடுதலை போராட்ட வீராங்கனைகள் அஞ்சலை அம்மாள், வீரமங்கை வேலு நாச்சியார் ஆகியோருக்கும் தவெக மாநாட்டுத் திடலில் கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது.

Oct 25, 2024 - 13:14
தவெக மாநாட்டில் சிங்கப்பெண்கள்...விஜய் பேசப்போகும் அரசியல் இதுவா...இறுதி கட்டத்தில் பணிகள் தீவிரம்

தவெக மாநாட்டில் வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் உள்ளிட்ட பெண் ஆளுமைகளின் கட் அவுட்கள் இடம் பெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே, அதிலிருந்து விலகி அரசியலில் களமிறங்க முடிவு செய்துள்ளார் தளபதி விஜய். அதன்படி,இந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியை ஆரம்பித்தார் விஜய், தற்போது அதன் முதல் மாநில மாநாட்டுக்கான வேலைகளில் பிஸியாக காணப்படுகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் வரும் 27ம் தேதி தவெக மாநாடு நடைபெறுகிறது. இதற்காக 100 ஏக்கருக்கும் அதிகமான இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள தவெக, அதில் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்து வருகிறது.   

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மேடை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் விஜய்யின் அரசியல் கொள்கை, சித்தாந்தம் எது என்பது தான் மில்லியன் டாலர் கேள்விகளாக உள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற டேக் லைன் மட்டுமே இதுவரை, தவெக அறிக்கைகளில் தவறாமல் இடம்பிடித்து வருகிறது. ஆனாலும், கட்சியின் கொள்கை பற்றியும், தவெக கொடி குறித்தும் இதுவரை விஜய் விளக்கம் கொடுக்கவே இல்லை. இதற்காக தற்போதைய தவெக மாநாடு என சொல்லப்படுகிறது.

அதாவது வரும் 27ம் தேதி நடைபெறும் தவெக மாநாட்டில், கட்சியின் கொள்கை உட்பட கொடி குறித்தும் விளக்கம் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக மாநாட்டு திடலில் விஜய்க்கு சுமார் 70 அடி உயரத்தில் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஹைலைட்டான விஷயமே விஜய்யின் கட்-அவுட் அருகே பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோருக்கும் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. பெரியார் – அம்பேத்கர் ஆகியோருக்கு நடுவே விஜய்க்கு கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தவெக மாநாட்டுத் திடலில் கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக பெரியாரின் பிறந்தநாள் தினத்தில், அவரது நினைவிடத்துக்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அதேபோல், தமிழ் வரலாற்று ஆளுமைகளுக்கும் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் வாசகத்தின் உருவக கட் அவுட், விடுதலை போராட்ட வீராங்கனைகள் அஞ்சலை அம்மாள், வீரமங்கை வேலு நாச்சியார் ஆகியோருக்கும் தவெக மாநாட்டுத் திடலில் கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தவெக தலைவர் விஜய் பேசபோகும் அரசியல் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தவெக தொண்டர்கள் மட்டுமின்றி அனைவரிடம் ஏற்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow