முதலமைச்சரின் சூறாவளி சுற்றுப்பயணம் எங்கெங்கே.. எப்போது..? பயண அட்டவணையை வெளியிட்ட திமுக.!

நாடாளுமன்ற தேர்தலுக்காக மார்ச் 22-ம் தேதி  முதல் ஏப்ரல் 17-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரபரப்புரை செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Mar 20, 2024 - 20:01
முதலமைச்சரின் சூறாவளி சுற்றுப்பயணம் எங்கெங்கே.. எப்போது..? பயண அட்டவணையை வெளியிட்ட திமுக.!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்காக மார்ச் 22-ம் தேதி  முதல் ஏப்ரல் 17-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரபரப்புரை செய்கிறார். இந்நிலையில், அவர் எங்கெங்கே எந்த தேதிகளில் செல்கிறார் என்ற விவரங்கள் அடங்கிய அட்டவணையை திமுக வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி முதலமைச்சர் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விரிவான அட்டவனையும் வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த விவரங்கள்,

22-03-2024 - திருச்சி, பெரம்பலூர் 

23-03-2024- தஞ்சை, நாகை 

25-03-2024- கன்னியாகுமரி, திருநெல்வேலி 

26-03-2024 - தூத்துக்குடி, இராமநாதபுரம் 

27-03-2024- தென்காசி, விருதுநகர் 

29-03-2024-தருமபுரி, கிருஷ்ணகிரி 

30-03-2024- சேலம், கிருஷ்ணகிரி 

31-03-2024- ஈரோடு, நாமக்கல், கரூர் 

02-02-2024- வேலூர், அரக்கோணம் 

03-04-2024- திருவண்ணாமலை, ஆரணி 

05-04-2024- கடலூர், விழுப்புரம் 

06-04-2024- சிதம்பரம், மயிலாடுதுறை 

07-04-2024- புதுச்சேரி 

09-04-2024- மதுரை, சிவகங்கை 

10-04-2024- தேனி, திண்டுக்கல்

12-04-2024- திருப்பூர், நீலகிரி 

13-04-2024- கோவை, பொள்ளாச்சி

15-04-2024- திருவள்ளூர், வடசென்னை

16-04-2024- காஞ்சிபுரம், திருபெரும்புதூர் 

17-04-2024- தென்சென்னை, மத்தியசென்னை 

இந்த அட்டவனையுடன், கழக தொண்டர்களுக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதில், குறிப்பிட்ட தேதிகளில் வேறு எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டாமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow