ஜெர்மனியில் தஞ்சமடைந்த பிரஜ்வல் ரேவண்ணா... விமான நிலையங்களுக்கு பறந்த லுக்அவுட் நோட்டீஸ்...
பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
பாலியல் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும், ஜேடிஎஸ் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அரசியலில் ஹாசன் தொகுதி எம்.பியும், தற்போதைய ஜேடிஎஸ் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா 300-க்கும் மேற்பட்ட பெண்கள், அரசு அதிகாரிகளை மிரட்டி பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்து அதை 2,976 ஆபாச வீடியோக்களாக எடுத்து பென் டிரைவ்வில் வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. அத்துடன் பிரஜ்வல் ரேவண்ணாவுடன் பல பெண்கள் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களும் அடுத்தடுத்து வெளியானதால், அவர் மீதும் அவரது தந்தை ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா இரவோடு இரவாக பெங்களூருவில் இருந்து ஜெர்மனிக்கு சென்றார். அவருக்கு பதில் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கறிஞர் ஆஜராகி விசாரணைக்கு 7 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும், அவரை இந்திய தூதரகம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேற்று (மே 1) கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூலம் பிரஜ்வல் ரேவண்ணா ஆஜரானவுடன், அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு தயாராகவுள்ளது.
What's Your Reaction?