Actor sri: வழக்கு எண் ஹீரோவா இது? என்னய்யா ஆச்சு உனக்கு..புலம்பும் ரசிகர்கள்
வழக்கு எண் 18/9 , மாநகரம் போன்ற படங்களில் நடித்து பரீட்சையமான நடிகர் ஸ்ரீ இன்ஸ்டா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வெகு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், அனைவரின் நினைவிலும் இருக்கும் நடிகர்கள் ஒரு சிலர் உண்டு. அதில் ஒருவர் தான், நடிகர் ஸ்ரீராம் நடராஜன் என்கிற ஸ்ரீ. இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இருகப்பற்று, வில் அம்பு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நல்ல பரீட்சையமானவர் நடிகர் ஸ்ரீ. நடித்த அத்தனைப்படங்களும் நல்ல கதையம்சம் கொண்டவை. அதிலும், இவருடைய கதாபாத்திரமும் வலுவாக இருக்கும்.
தேர்ந்தெடுத்து படங்களை நடித்து வந்த காரணத்தினால், இவரை திரையில் அடிக்கடி காண முடியாது. இருப்பினும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக அவ்வப்போது சில புகைப்படங்களை பகிர்ந்த வண்ணம் இருந்தார். சமீபத்தில் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறையான ஆடைகளுடன், தலைமுடிக்கு கலரிங் செய்து, எலும்புகள் தெரியும் வண்ணம் மெலிந்த தேகத்துடன் சில புகைப்படங்களை பகிர்ந்து இருந்ததை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தனிமையில் இருந்து வெளியே வாருங்கள்: ரசிகர் வேண்டுக்கோள்
பலர் கமெண்டில் என்ன தான்யா ஆச்சு உனக்கு? என பதிவிட்டுள்ளனர். இன்னொரு பதிவர், “ப்ரோ உங்களுடைய வாழ்வினை தொடர்ந்து பார்த்து வந்தவன் என்கிற முறையில் இதை பதிவிடுகிறேன். இறுகப்பற்று மற்றும் வில் அம்பு படத்தில் நடித்ததற்கு உங்களுக்கு சம்பளம் தர எவ்வளவு காலத்தாமதம் ஆகியது, அதனால் நீங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டீர்கள் என்பதே நான் அறிவேன். தங்கள் ஆன்மாவை செலுத்தி நடிக்கும் உண்மையான கலைஞர்களை இந்த சமூக கட்டமைப்பு இவ்வாறு நடத்துவதை பார்க்கும் போது மனம் கணக்கிறது. ஆனால், தயவு செய்து உங்களை தனிமைப்படுத்தி கொள்ளாதீர்கள். உங்களது திரையுலக நண்பர்கள், உறவினர்களுடன் மீண்டும் இணைய முயற்சியுங்கள். நீங்கள் தனியாக இல்லை என்பதை உணருங்கள்” என மனம் உருகி பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீ நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் இறுகப்பற்று. முன்னதாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, நான்கு நாட்களில் தன்னால் இங்கு இருக்க முடியவில்லை என வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
View this post on Instagram
What's Your Reaction?






