Apollo-வின் முழுமையான நினைவாற்றல் சிகிச்சை மையம்!

நினைவாற்றல் அல்லது பிற அறிவாற்றல் குறைபாடுகளுக்கான காரணங்களை கண்டறிந்து, தனிப்பட்ட சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் நீண்டகால ஆதரவை வழங்கும் சிறப்பு மருத்துவ சேவையே நினைவாற்றல் சிகிச்சை மையம்.

Sep 23, 2026 - 17:53
Apollo-வின் முழுமையான நினைவாற்றல் சிகிச்சை மையம்!

நினைவாற்றல் சிகிச்சை மையம் என்றால் என்ன?

நினைவாற்றல். நினைவாற்றல் அல்லது பிற அறிவாற்றல் குறைபாடுகள் குறித்து மதிப்பீடு செய்து, அவற்றுக்கான காரணங்களைக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் நீண்டகால ஆதரவை வழங்கும் சிறப்பு மருத்துவ சேவையே நினைவாற்றல் சிகிச்சை மையம்.

நரம்பியல் மற்றும் நரம்புமனநல மருத்துவ நிபுணர்கள், முதியோர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவ உளவியலாளர்கள் இணைந்து, பெரியவர்கள் மற்றும் முதியோருக்கு தனிப்பட்ட மற்றும் ஆதார அடிப்படையிலான சிகிச்சையை வழங்குகின்றனர்.

நினைவாற்றல் குறைபாட்டிற்கான பொதுவான காரணங்கள்

நினைவாற்றல் குறைபாடு இருப்பது எல்லா நேரமும் டிமென்ஷியா (Dementia) என்று பொருளல்ல. குறிப்பாக இளம் மற்றும் நடுத்தர வயதினரில் மனச்சோர்வு, பதட்டம், நீடித்த மனஅழுத்தம், தூக்கக் கோளாறுகள், ADHD, போதைப்பொருள் பயன்பாடு, சில மருந்துகளின் விளைவுகள், தைராய்டு கோளாறுகள், வைட்டமின் குறைபாடுகள், தலையில் ஏற்பட்ட காயம் மற்றும் பிற நரம்பியல் நோய்கள் காரணமாக இருக்கலாம்.

டிமென்ஷியாவின் ஆரம்ப அறிகுறிகள்

ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பது, சமீபத்தில் கற்றுக்கொண்ட தகவல்களை மறப்பது, பணம் அல்லது மருந்துகளை நிர்வகிப்பதில் சிரமம், பழக்கமான இடங்களில் வழி தவறுதல், வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம், திட்டமிடுதல் அல்லது பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிரமம் மற்றும் அன்றாட செயல்பாடுகளில் படிப்படியாகக் குறைதல் ஆகியவை ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

முடிவெடுக்கும் திறன், தன்மை, ஆர்வம் அல்லது சமூக நடத்தை ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்படலாம்.

விரிவான பரிசோதனைகள்

ஒவ்வொருவருக்கும் அவர்களின் வயது, அறிகுறிகள், பரிசோதனை முடிவுகள் மற்றும் சந்தேகிக்கப்படும் காரணத்தின் அடிப்படையில் மதிப்பீடு மற்றும் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

  • MRI Brain - மூளையின் அமைப்பு, இரத்தக்குழாய் மாற்றங்கள், பக்கவாதம், மூளைச் சுருக்கம் மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய காரணங்களை மதிப்பிட
  • FDG-PET Brain மூளையின் glucose metabolism-ஐ மதிப்பிட்டு, சில நரம்புச் சிதைவு நோய்களை வேறுபடுத்த.
  • TRODAT Brain Scan குறிப்பிட்ட நோயாளிகளில் dopamine system-ஐ மதிப்பிட, குறிப்பாக Lewy body disease சந்தேகிக்கப்படும் போது.
  • CSF பரிசோதனை மற்றும் Alzheimer's biomarkers -அழற்சி, தொற்று, autoimmune a neurodegen-erative நோய்கள் சந்தேகிக்கப்படும் போது.
  • Plasma Alzheimer's biomarkers -இரத்தப் பரிசோதனை மூலம் Alzheimer's pathology-ஐ மதிப்பிட.
  • Genetic testing இளம் வயதில் தொடங்கும் dementia, வலுவான குடும்ப வரலாறு அல்லது மரபியல் நோய் சந்தேகம் உள்ளவர்களுக்கு, மரபணு ஆலோசனையுடன்.

சிகிச்சை

Mild Cognitive Impairment dementia மற்றும் ஆகியவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது முக்கிய நோக்கமாகும். ஆரம்பகட்ட Alzheimer's disease உள்ள, தகுதியான நோயாளிகளுக்கு anti-amyloid therapies இதனுடன் தேவையான பரிசோதனைகள் மற்றும் தொடர் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படும். 

Dementia-வுடன் தொடர்புடைய பதட்டம், மனச்சோர்வு, agitation, தூக்கக் கோளாறுகள், apathy, hallucinations மற்றும் பிற நடத்தை சார்ந்த பிரச்சினைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். ADHD, மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தம் போன்ற dementia அல்லாத காரணங்களால் ஏற்படும் அறிவாற்றல் குறைபாடுகளுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்படும்.

டிமென்ஷியா தடுப்பு மற்றும் மூளை ஆரோக்கியம்

WHO 2026 வழிகாட்டுதல்களின் அடிப்படையில் dementia risk assessment மேற்கொள்ளப்படும். அதிக அல்லது மிதமான ஆபத்து உள்ளவர்களுக்கு தனிப்பட்ட risk-reduction திட்டம் வழங்கப்படும். இதில் இரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொழுப்பு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, அறிவாற்றல் செயல்பாடுகள், சமூக ஈடுபாடு, கேள்வித்திறன் குறைபாடு, மனச்சோர்வு, தூக்கப் பிரச்சினைகள், புகையிலை மற்றும் தீங்கு விளைவிக்கும் மதுபானப் பயன்பாட்டைக் குறைத்தல் ஆகியவை அடங்கும்.

உள்ளூர் தேவைகளுக்கேற்ற பல்துறை அணுகுமுறை

உள்ளூர் மக்களுக்காக உருவாக்கப்பட்ட மற்றும் சரிபார்க்கப்பட்ட அறிவாற்றல், செயல்திறன் v neuropsychiatric assessment tools பயன்படுத்தப்படும். மொழி, கலாசாரம் மற்றும் கல்விப் பின்னணி ஆகியவை மதிப்பீட்டில் கருத்தில் கொள்ளப்படும். நிபுணர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம், அசாமி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நோயாளிகள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியும்.
Caregiver Support Group கூட்டங்கள் நடத்தப்பட்டு, குடும்பத்தினருக்கு கல்வி, நடைமுறை வழிகாட்டுதல், உணர்வுபூர்வ ஆதரவு மற்றும் அனுபவங்களைப் பகிரும் வாய்ப்பு வழங்கப்படும்.

Apollo Memory Care Clinic மற்றும் அறிவாற்றல் குறைபாடுகளுக்கான விரிவான, தனிப்பட்ட மற்றும் முழுமையான பராமரிப்பை வழங்குவதுடன், நோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதைத் தாண்டி, ஆரம்பகட்ட ஆபத்து மதிப்பீடு, தடுப்பு மற்றும் ஆரோக்கியமான மூளை முதிர்ச்சியை வலியுறுத்துகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow