கோவை ரோட் ஷோ... தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது - பிரதமர்

"இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை"

Mar 19, 2024 - 14:09
கோவை ரோட் ஷோ... தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது - பிரதமர்

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கோவையில் பாஜக சார்பில் நேற்று (மார்ச் 19) பிரமாண்ட வாகன அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனத்தில் பயணித்து மக்களை சந்தித்தார். வழிநெடுகிலும் ஏராளமானோர் பங்கேற்று பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் வாகனத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் பயணித்தனர். 

இதையடுத்து கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு பிரதமர் மோடி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 

இந்த நிலையில், பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், "1998-ல் நிகழ்ந்த கோயம்புத்தூர் தீவிரவாத குண்டுவெடிப்பை மறக்க முடியாது. இன்று இந்த நகரத்திற்கு வந்திருக்கும் போது, குண்டுவெடிப்புகளில் நம்மை விட்டுப் பிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன்" என கூறியுள்ளார். 

கோவை மக்கள் என் மனதை வென்றுவிட்டார்கள். இன்று (மார்ச் 18) மாலை நடந்த ரோட்ஷோ பல ஆண்டுகள் நினைவில் நிற்கும். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டது சிறப்பு. இந்த வாழ்த்துக்கள் பெரிதும் போற்றப்படத்தக்கவை. தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow