கண்ணதாசன் வரிகள்... இளையராஜா இசை... மனதை மயக்கும் ‘சிந்து நதி’!
சிவாஜி நடித்த ‘நல்லதொரு குடும்பம்’ படத்தின் ‘சிந்துநதிக்கரை ஓரம்’ பாடலில் கண்ணதாசனின் வரிகளும், இளையராஜாவின் இசையும், டி.எம்.எஸ்–சுசீலாவின் குரல்களும் தரும் இனிமையை ரசிக்கும் சினிமா நினைவுகள் இப்பதிவு விவரிக்கிறது.
படம் அவுட்டு... பாட்டு ஹிட்டு! - வி.ராம்ஜி
’நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று ‘தங்கப்பதக்கம்’ படத்தில் இடம்பெற்ற பாடலை நம்மால் மறக்கமுடியாது. ‘சிந்துநதியின் மிசை நிலவினிலே’ என்று பாரதியாரின் வரிகளை எத்தனை நூற்றாண்டுகளானாலும் நாம் நினைவில் வைத்திருப்போம். சிவாஜி நடித்த ‘தங்கப்பதக்கம்’ படத்திலுள்ள பாடலின் முதல்வரியான ‘நல்லதொரு குடும்பம்’ என்ற தலைப்பில் ஒரு படம் வெளியானது. அதில் சிவாஜியே நடித்திருந்தார்.
அதேபோல், இந்தப் படத்தில் ‘சிந்து நதி’யைச் சொன்ன பாடலும் வெளியானது. இதை கவியரசு கண்ணதாசன் எழுதியிருந்தார். ‘சிந்துநதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவன் பாடினான்’ என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? நம்மூர் குளம் குட்டைக்கு அருகில் இருந்து இந்தப் பாடலைக் கேட்டாலும் நதிக்கரை அழகையும் காற்றையும் நமக்கு அள்ளி அள்ளித் தரும் இந்தப் பாட்டு!
1979ஆம் ஆண்டு, கே.பாலாஜியின் தயாரிப்பில், கே.விஜயன் இயக்கத்தில் வெளியானது ‘நல்லதொரு குடும்பம்’. சிவாஜி, வாணிஸ்ரீ முதலானோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு கண்ணதாசன் பாடல்களை எழுதினார். இளையராஜா இசையமைத்தார். ஐந்தாறு பாடல்கள் இருந்தாலும் இந்தப் பாடல்தான், இந்த நல்ல பாடல்தான், இந்தக் குடும்பத்தை இன்னும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.
டிஎம் செளந்தர்ராஜனும் பி. சுசீலாவும் இணைந்து பாடிய பாடல் என்றாலே, நல்ல டிகாஷன் இறக்கி, கெட்டிப்பாலில் ஃபில்டர் காபி சாப்பிட்ட உணர்வு வந்துவிடும். கூடவே அந்தக் கால கண்ணதாசனும் இந்தக் கால இளையராஜாவும் இணைந்தால், கொஞ்சம் கேசரியும் சுடச்சுட பஜ்ஜியும் சாப்பிட்ட நிறைவும் கலந்துவிடும். அப்படியான பாட்டுதான் இந்தப் பாட்டு! பாடலின் தொடக்க இசையே ஒரு மென்மையைக் கொடுத்துவிடும். குழலும் கிடாரும் கைகோர்த்து காற்றில் ஓடிவரும்.
சிந்து நதி கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவை போல சூடினான்
சிந்து நதி கரை ஓரம்
என்று சுசீலாம்மாதான் பாடலைத் தொடக்கிவைப்பார்கள். சுசீலாம்மா சிந்து நதி கரை ஓரம் அந்தி நேரம் இப்போது டிஎம்எஸ் கொஞ்சத்தொடங்குவார். கோபத்தை தள்ளிவைத்தவர்களை உசுப்பிவிடும்படி யாராவது வந்தால் கூட, ‘எதுவா இருந்தாலும் இந்தப் பாட்டு முடியட்டும்டா’ என்று ஜாடையிலேயே சொல்லி, நதிக்கரையில் நின்று கால் நனைப்பார்கள். உச்சிவெயிலாக இருந்தாலும் அந்திநேரமாகிவிடும் அப்போது! மஞ்சள் மலர் பஞ்சணைகள் மஞ்சள் நிறம் என்பது மங்கலகரமான நிறம். தாம்பத்தியத்துக்கு மன்மதனின் மெளனம் கூட மந்திரம். குயிலின் சத்தமே சங்கீதம் எனும் போது, அந்தக் குயில்கள் கொஞ்சினால் இன்னும் காதலும் காமமும் உரசிக்கொள்ளுமே..! பாடலுக்குள் மங்கலச் சொற்களையும் கோதை ஆண்டாளையும் கண்ணனையும் கொண்டுவந்துவிடுவார் கண்ணதாசன். இதிலும் அப்படித்தான்! உடனே டிஎம்எஸ்... சொல்லி கொடுத்தேன் கதை கதை என்று பாட, காதலி நெக்குருகிப்போவாள். அதிலும் காதலுக்கும் காதலர்களுக்கும் சம்பந்தம் உண்டோ இல்லையோ... காதலுக்கும் கண்ணம்மாவுக்கும் ஜென்மாந்திரத் தொடர்பு இருப்பதாக நினைக்கிறேன். வேண்டுமானால், ‘கண்ணம்மா’ என்று வருகிற பாடல்களைக் கேட்டுப் பாருங்கள்... ஏதோ ஒருவகையில் பச்சக்கென்று நமக்குள் பல்பு எரியும்; ஒளிரும்! கொலுசு போன்ற சத்தமாம் தெள்ளுதமிழுக்கு! லூசுத்தனமான தமிங்கிலீஷ் தமிழெல்லாம் இல்லை. தெள்ளிய தமிழ்; அந்தத் தமிழை ஒரு சிலம்பு போல், கொலுசு போல், அணிந்திருப்பதால், அப்படியொரு மென்மை, வசீகரம்! அதுமட்டுமா? கூந்தலுக்கு மணம் உண்டா என்று ‘திருவிளையாடல்’ படத்தில் கேட்ட கதை நமக்குத் தெரியும்.
இங்கே கண்ணதாசன் கூந்தலில் கள் இருப்பதாகச் சொல்கிறார். கூந்தல் அவ்வளவு போதையைப் புகட்டுகிறது என்கிறார். அப்பேர்ப்பட்ட போதை தரும் கூந்தலில், முல்லை மலர் கொடுத்தேன் என்று டிஎம்எஸ் பாடுவார். அந்த இடத்தில் நமக்குப் பிடித்தமான பெண்ணின் கூந்தலும், கூந்தலில் கள் குடிகொண்டிருப்பதும் நாம் முல்லைப்பூவைக் கொடுப்பதுமாக ஒரு ரவுண்டு போய்விட்டுத்தான் வருவோம். இதையடுத்து வருகிற இடையிசையும் நம்மை ஒரு ராஜபோதைக்குள் ராணியை நினைத்து நினைத்து, நம்மையே மறக்கச் செய்யும். வானவெளியில் இதம் இதம்
எந்தன் தேவி பாடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவை போல சூடினாள்
சிந்து நதி கரை ஓரம்
மன்மதனின் மந்திரங்கள்
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோதை எந்தன் சீர்வரிசை
அள்ளி கொடுத்தாய் அதை அதை
காதல் கண்ணம்மா
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்
சோலை வெளியில் சுகம் சுகம். காதல் மன்னவா என்பார் சுசீலா. ‘மன்னவனே அழலாமா’ முதலான பாடல்களில் மன்னவன் என்று வரும்போது, பெண்கள் கொஞ்சம் கிறங்கித்தான் போகிறார்கள். இங்கேயும் அப்படியே நிகழும்!
‘சிந்து நதிக்கரை ஓரம்’ பாடலின் தொடக்க இசையும் ‘தூறல் நின்னு போச்சு’ படத்தின் ‘பூபாளம் இசைக்கும்’ பாடலின் ஆரம்ப இசையும் ஒரே மாதிரி இருக்கும். ராக அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான். ஆனால் அடுத்தடுத்து ராகங்களை வேறுவேறுவிதமாக இணைத்திருப்பார் இளையராஜா. உண்மைதான். ‘சிங்காரவேலன்’
இத்தனை டோல்கேட்டுகளையெல்லாம் தாண்டி, ‘சிந்துநதிக் கரை ஓரம் அந்தி நேரம்’ என்று டிஎம் செளந்தர்ராஜன் சொல்ல, ‘எந்தன் தேவன் பாடினான்’ என்று சுசீலாம்மா பாட, ‘தமிழ் கீதம் பாடினாள்’ என்று செளந்தர்ராஜன் ஐயா கொஞ்ச, ‘எனை பூவைப் போல சூடினான்’ என்று சுசீலாம்மா கொஞ்ச... பாடலைக் கேட்டால் நம் இல்லமும் ‘நல்லதொரு குடும்பம்’தான் போங்கள்!
What's Your Reaction?