GOAT: விஜய்யின் கோட் சாட்டிலைட் ரைட்ஸ் இத்தனை கோடியா..? ரெக்கார்ட் பிரேக் சம்பவம் தான்!
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை மிகப் பெரிய விலைக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் எஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனையடுத்து கோட் ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்த படக்குழு, மேலும் பல அப்டேட்களுடன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கிறது. இதனிடையே கோட் படத்தின் ஓடிடி ரைட்ஸ், தொலைக்காட்சி உரிமை, ஆடியோ ரைட்ஸ் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ 5 தொலைக்காட்சி வாங்கியுள்ளதாம். 7 ஆண்டுகளுக்கு முன்னர் விஜய்யின் மெர்சல் படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ 5 கைப்பற்றியது. அதன் பின்னர் கோட் படத்தை 96 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தமிழ் மட்டுமில்லாமல் அனைத்து மொழி ரைட்ஸ் என்றும் சொல்லப்படுகிறது. முன்னதாக விஜய்யின் பீஸ்ட், லியோ படங்களின் சாட்டிலைட் ரைட்ஸ் 73 கோடிக்கு விற்பனையாகியிருந்தது. அந்த சாதனையை விஜய்யின் கோட் படமே பிரேக் செய்துள்ளது.
அதேபோல், கோட் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. இதுவும் கோலிவுட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய பட்ஜெட்டில் விற்பனையாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் கோட் படத்தின் ஆடியோ ரைட்ஸும் தரமான சம்பவம் செய்துள்ளதாம். அதன்படி கோட் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?