Kadhalikka Neramillai: ஜெயம் ரவி–நித்யா மேனன் ரொமான்ஸ்... சிலிர்க்கும் காதலிக்க நேரமில்லை கிளிம்ப்ஸ்
ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து வியக்க வைத்திருந்தார் ஜெயம் ரவி. ஆனால், அதன் பின்னர் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து வெளியான அகிலன், இறைவன், சைரன் படங்கள் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. தற்போது ஜீனி, காதலிக்க நேரமில்லை படங்களில் பிஸியாக காணப்படுகிறார். இதில், காதலிக்க நேரமில்லை படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் நிறைவுபெற்றது. கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
காதலிக்க நேரமில்லை க்ளிம்ப்ஸ்
ஜெயம் ரவி ஜோடியாக நித்யா மேனனும், முக்கியமான கேரக்டர்களில் வினய், யோகி பாபு, லால், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கியமாக இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனால் காதலிக்க நேரமில்லை படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. காதல் ப்ளஸ் ரொமன்ஸ் ஜானரில் முழுக்க முழுக்க ஃபேண்டஸியான படமாக காதலிக்க நேரமில்லை உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஏஆர் ரஹ்மானின் மேஜிக்கல் மியூசிக் ட்ரீட்
ஏஆர் ரஹ்மானின் இசையில் வெளியாகியுள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது. பிஜிஎம் மட்டுமின்றி ஏஆர் ரஹ்மானின் மேஜிக்கலான குரலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல், விஷுவலாகவும் காதலிக்க நேரமில்லை க்ளிம்ப்ஸ் வீடியோ செம்மையாக ரீச் ஆகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் அப்டேட்டாக இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து காதலிக்க நேரமில்லை டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் இரண்டும் ரிலீஸாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரெண்டிங்கில் ஏஆர் ரஹ்மான்
இந்நிலையில், காதலிக்க நேரமில்லை க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது முதல், ஏஆர் ரஹ்மான் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்ப் படங்களுக்கு அதிகளவில் இசையமைத்து வருகிறார் ஏஆர் ரஹ்மான். கமலின் தக் லைஃப், தனுஷின் ராயன், ஜெயம் ரவியின் ஜீனி, காதலிக்க நேரமில்லை, தெலுங்கில் ராம் சரணின் RC 16 உள்ளிட்ட மேலும் சில படங்கள், ஏஆர் ரஹ்மான் லைன் அப்பில் உள்ளன. இதுதவிர இந்தியிலும் 4 படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஏஆர் ரஹ்மான். இந்நிலையில், காதலிக்க நேரமில்லை படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
What's Your Reaction?