குழந்தைகளுக்கு இதையா குடுக்குறீங்க...? செர்லாக்ல என்ன தெரியுமா..? அதிர வைக்கும் புதிய ரிப்போர்ட்
நெஸ்லே நிறுவனத்தின் அலட்சிய பதிலால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
உலகப்புகழ் பெற்ற நெஸ்லே நிறுவனத்தின் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவான செர்லாக்கில் இரட்டைத் தரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மறுக்காமல் நிறுவனம் எதிர்பாராத பதிலைக் கூறியிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு ஊட்டச்சத்துக்காக கொடுக்கும் செர்லாக் பெரியவர்களுக்கும் ரொம்பப் பிடிக்கும். வயதானவர்களாக இருந்தாலும் நம்மில் பலருக்கு வெறும் வாயில் செர்லாக்கை சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஊட்டச்சத்துப் பொருளான செர்லாக்கில் அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் எனப்படும் சுவைக்கு அடிமையாகும் உப்புக்கள் சேர்க்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
சுவிட்சர்லாந்தை தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் நெஸ்லே நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் சந்தை இருக்கும் நிலையில், அதன் இரட்டை தரத்தை, ஒரு உளவு அமைப்பு வெளிக்கொணர்ந்துள்ளது. சர்வதேச குழந்தை உணவுகளுக்கான நடவடிக்கை அமைப்பு என்ற புலனாய்வு நிறுவனம், நெஸ்லேவின் செர்லாக்கை எடுத்து ஆய்வு செய்திருக்கிறது. அதன் ஆய்வு முடிவுகளில் நெஸ்லேவின் முக்கிய சந்தையான ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் விற்கப்படும் செர்லாக்கில், உடலுக்குக் கேடு விளைவிக்கும் அடிக்டிவ் சுகர் எதுவும் கலக்கப்படாமல் விற்கப்படுகிறதாம்.
ஆனால், இந்தியா மற்றும் கிழக்காசிய நாடுகளில் விற்பனை ஆகும் செர்லாக்கில், ஆபத்தை ஏற்படுத்தும் அடிக்டிவ் சுகர்கள் கலக்கப்படுவதாகவும் அந்தப் புலனாய்வு நிறுவனத்தின் ஆய்வுகள் சொல்கிறது. இந்தியாவில் மட்டும் 2022-ம் ஆண்டின் கணக்குப்படி செர்லாக் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை நடந்திருப்பதாகச் சொல்கிறது புள்ளி விவரம். இவ்வளவு வர்த்தகம் நடைபெறும் நாடுகளுக்கு இரட்டைத் தரத்தைக் கடைபிடிக்கும் நெஸ்லேவின் நடத்தையை உலக சுகாதார நிறுவனம் கண்டித்துள்ளது.
ஆறு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்துப் பொருளாக செர்லாக் இருக்கும் நிலையில், அந்த வயது முதலே குழந்தை அடிக்டிவ் சுகருக்கு ஆட்பட்டால் பிற்காலத்தில் உடல் உபாதைகள் அதிகம் வர வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம், நெஸ்லே இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஆனால், நெஸ்லே தரப்பிலிருந்து இதுகுறித்து வேறு மாதிரியான விளக்கம் கிடைத்துள்ளதாக ஆய்வு செய்த புலனாய்வு அமைப்பு சொல்கிறது.
“எங்கள் செர்லாக் உணவுப் பொருளில் சுகர் சேர்ப்பதை 11% ஆக குறைத்துவிட்டோம்” என்று சொல்லியிருக்கிறது நெஸ்லே நிறுவனம். மற்ற நாடுகளுக்கு 1% கூட சுகர் கலக்காமல் விற்கும் நெஸ்லே நிறுவனம், இங்கு மட்டும் 11% வரை பயன்படுத்துவதை அலட்சியமாக தெரிவித்துள்ளது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
What's Your Reaction?